என்னை பிளான் பண்ணி சிக்க வைச்சிட்டீங்களே! சீறும் முதலையை வேட்டையாடும் இளைஞர்

Crocadile Hunt: இப்படியொரு முதலை வேட்டையை யாரும் பார்த்திருக்க முடியாது! சபாஷ் பலே பலே...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 16, 2022, 02:14 PM IST
என்னை பிளான் பண்ணி சிக்க வைச்சிட்டீங்களே! சீறும் முதலையை வேட்டையாடும் இளைஞர் title=

வைரல் வீடியோ: சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் ஆடல் பாடல், சண்டை, மோதல் என பல்சுவையூட்டும் விஷயங்கள் உள்ளன. அவை ரசிக்கப்பட்டு, வைரலாகின்றன. அண்மையில் வைரலாகும் வீடியோக்களில் விலங்குகள் தொடர்பானவை அதிக வைரலாகின்றன. அதில் முதலையின் வெறித்தனமான தாக்குதலையும் பார்த்திருக்கலாம், பாம்பால் வேட்டையாடப்படும் முதலையையும் பார்த்திருக்கலாம். அதேபோல, முதலையின் வேட்டையையும் பார்த்திருக்கலாம். ஆனால், தற்போது ஒரு முதலை வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. அது முதலை வேட்டை வீடியோ என்றாலும் வித்தியாசமான வீடியோ ஆகும்.

நீரிலும் நிலத்திலும் வாழும் முதலை, நீருக்குள் இருக்கும்போது நீர்வாழ் உயிரினங்களை வேட்டையாடுகிறது. நிலத்தில் வரும்போது, அதைப் பார்த்து மனிதர்கள் பயப்படுவதே, அது தாக்குவதை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் முதலை வீட்டிற்குள் வந்துவிட்டால் என்ன ஆகும்?

கட்டிடத்திற்குள் வந்த முதலை, சீறுகிறது. ஆனால் அதை எப்படி லாவகமாக கையாள்கிறார்கள், அதனை எப்படி பிடிக்கிறார்கள் என்ற வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது. அந்த வைரல் வீடியோ இது...

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு ஊழியர் லாவகமாக பிளாஸ்டிக்கால் ஆன குப்பைத் தொட்டிக்குள் முதலையை உள்ளே செல்ல வைக்கும் புத்திசாலித்தனமும், அதை அங்கிருந்து கொண்டு செல்வதும் இதில் தெளிவாகத் தெரிகிறது. 

மேலும் படிக்க | தாத்தா ஆடும் ஆட்டம், பாத்தா ஆடிப்போயிடுவீங்க: கிரிக்கெட் தாத்தாவின் வைரல் வீடியோ

உண்மையில், முதலையை பிளாஸ்டிக் அடைப்பானுக்குள் அடைத்துவிட்டாலும், அதன் எடை காரணமாக அது துள்ளினால், மீண்டும் வெளியே வந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. இதை உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும் என இணையவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

இப்படி பிளான் பண்ணி சிக்க வைச்சிட்டீங்களே என்று முதலைக்கு கோபம் வந்து துள்ளி குதிக்குமோ? துள்ளி குதித்தாலும் பிளான் பண்ணி பக்கெட்டுக்குள் முதலையை அடைத்து முதலை வேட்டையாடிய இளைஞரும், அவருடன் இருப்பவரும் மீண்டும் அதை வெளியே வர விட்டு விட மாட்டார்கள் என்று மற்றொரு இன்ஸ்டா பயனர் கருத்து தெரிவிக்கிறார்.

மேலும் படிக்க | காதலியை கரெக்ட் பண்ண நடுரோட்டில் காதலன் செய்த செயல்: வீடியோ வைரல் 

எது எப்படியிருந்தாலும், விலங்குகளைப் பார்த்தால் ஏற்படும் அச்சம் மட்டும் யாருக்கும் குறைவதில்லை. ஆனால், அச்சப்பட வைக்கும் விலங்குகளை லாவகமாக கையாளும் புத்திசாலிகளும் நம்மிடையே இருக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான விஷயம் ஆகும். இதுபோன்ற வித்தியாசமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி அனைவரையும் ரசிக்க வைக்கின்றன.

பிரச்சனையை எப்படி கையாள்வது என்பதை கற்றுக் கொடுக்கும் வீடியோ இது என்பதால், லட்சக்கணக்கானவர்களின் பாராட்டை பெறும் நம்பர் ஒன் வீடியோ இந்த முதலை வேட்டை வீடியோ...

மேலும் படிக்க | சீறி சினந்து முட்டி மோதும் காளைகள்! கொம்பு சீவி விட்டது யாரோ?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News