இன்றைய திக் திக் வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படி சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் வனவிலங்குகளின் வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வெளியாகியுள்ள வீடியோவில் 3 சிறுவர்கள் நீர்யானை அப்படியே விழுங்கிய சம்பவம் இணையவாசிகளுக்கு பகீர் கிளப்பியுள்ளது.


மேலும் படிக்க | ’மிரள வைக்கும் வேட்டை’ தண்ணீருக்குள் சென்று முதலையை கவ்வும் சிறுத்தை: வைரல் வீடியோ


பொதுவாக கடலில் மற்றும் நீர் நிலைகளில் வாழும் விலங்குகளில் சுறா, முதலை,  உள்ளிட்ட விலங்குகள் மிகவும் ஆபத்தானது என்று நாம் அனைவர்க்கும் தெரியும். இந்த விலங்குகள் தண்ணீர் குள் வருவதை நாம் சுலபமாக பார்க்க முடியும். ஆனால் நீர் யானை வந்தால் அவ்வளவு சுலபமாக பார்க்க முடியாது. ஏனென்றால், அவை தூரத்திலிருந்து தண்ணீர் குள் மிகவும் அமைதியுடன் வந்து நம்மளை தாக்கும். இதற்கான பல வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த வகையில், தற்போது ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.


இந்த சம்பவம் ஆப்பிரிக்காவில் நடந்துள்ளது. மேலும் இந்தச் சம்பவம் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்ததாகும். இதில் மூன்று சிறுவர்கள் நீச்சல் அடைத்து ஜாலியாக இருப்பதை ணாம் காணலாம். அப்போது அங்கே ஒரு பெரிய நீர்யானை வந்த போது அவர்கள் அஞ்சிவிட்டனர். அந்த நீர்யானை ஒரு பெரிய சவுண்டு கொடுக்க சிறுவர்கள் அலறியடித்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினர். அதிர்ஷ்டவசமாக சரியான நேரத்தில் அனைவரும் குளத்தை விட்டு வெளியேறிய காரணத்தால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டில் வெளியான இந்த வீடியோ சம்பவம் தற்போது படுவேகமாக டிரெண்டாகி வருகிறது.


சிறுவர்களை விழுங்க முயற்சித்த நீர்யானையின் வீடியோவை இங்கே காணுங்கள்:



நீர்யானைகள் எவ்வளவு ஆபத்தானவை மற்றும் கணிக்க முடியாதவை என்பதைப் பலரும் உணர வைக்கிறது இந்த வீடியோ. அத்துடன் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். மேலும் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல்முறை இல்லை. கடந்த காலங்களிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. உகாண்டாவில் நீர்யானை ஒன்று கைக்குழந்தையை அப்படியே விழுங்கியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | ஓடி வந்தவரின் சோலியை முடித்த ஒட்டகம்: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ