ஓடி வந்தவரின் சோலியை முடித்த ஒட்டகம்: வைரல் வீடியோ

அரேபியாவில் நடைபெற்ற உயரம் தாண்டுதல் விளையாட்டு போட்டியில், ஓடி வந்தவரை ஒட்டகம் ஒன்று எட்டி உதைத்த வீடியோ காண்போரை பதறவைக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 16, 2023, 05:43 PM IST
ஓடி வந்தவரின் சோலியை முடித்த ஒட்டகம்: வைரல் வீடியோ title=

விளையாட்டு போட்டிகளை வித்தியாசமாக வைக்க வேண்டும் என நினைத்து, கிரியேட்டிவாக யோசித்து வைக்கும் போட்டிகள் யாருக்காவது வினையாக முடியும். ஜாலிக்காக செய்ய நினைத்து, பிரச்சனை ஏற்பட்டவுடன் தான் நினைப்பார்கள், இதை செய்திருக்க வேண்டாமே என்று. தைப்பொங்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டு பண்டிகைகள் உள்பட உலகம் முழுவதும் சிறப்பு விழா நாட்களில் சில சம்பவங்கள் அரங்கேறும். அந்த நேரத்தில் சிரிக்கவும் முடியாமல், சிறிய அளவிலான பிரச்சனையில் சிக்கியவர்களை பார்த்து பரிதாபமும் பட முடியால் இருக்க முடியாது. அப்படியான சம்பவம் ஒன்று அரேபியாவில் அரங்கேறியிருக்கிறது. உயரம் தாண்டுதல் போட்டிக்கு கம்பியை வைத்து ஏற்பாடு செய்யாமல், அவர்கள் விநோதமாக ஒட்டகத்தை வைத்து போட்டியை நடத்தியிருக்கிறார்கள். 

மேலும் படிக்க | பாம்பால் அடித்து சண்டை... நம்ப முடியாத சீன்ஸ்: வைரல் வீடியோ

அதில் தான் ஒருவருக்கு ஒட்டகத்தால் சொல்லொண்ணா பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. உயரமான ஒட்டகத்தை நிறுத்தி வைத்து, அதனை தாண்ட வேண்டும் என கூறியிருக்கிறார்கள். பலரும் ஓடி வந்து தாண்டும்போது எந்த பிரச்சனையும் செய்யாமல் அமைதியாக இருந்த ஒட்டகம், இளைஞர் ஒருவர் வேகமாக ஓடி வந்து தாண்டும்போது, அவரை எட்டி உதைத்துவிடுகிறது. இப்படி நடக்கும் என அவரும், போட்டியை ஏற்பாடு செய்தவர்களும் துளியும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்... பார்க்கவும் இல்லை. அதனால், அடி வாங்கிக் கொண்டு கிழே பொத்தென விழுந்தார் அந்த நபர். பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தாலும், இதனை வீடியோவில் பார்க்கும் நெட்டிசன்கள் வயிறு வலிக்க சிரித்துக் கொண்டிருக்கின்றனர். பேக்கிரவுண்ட் மியூசிக் எல்லாம் போட்டு காமெடியாக்கியுள்ளனர்.

அந்த வீடியோவில் உயரமான ஒட்டகம் ஒன்று நிற்க வைக்கப்பட்டிருக்கிறது. உயரம் தாண்டுதலுக்காக நிற்க வைக்கப்பட்ட அந்த ஒட்டகத்தின் இரு புறமும் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இப்போது ஒவ்வொருவராக ஒடி வந்து அந்த ஒட்டக்கத்தை தாண்ட வேண்டும். அதற்காக ஒருவர் சற்று தூரத்தில் இருந்து வேகமாக ஓடி வருகிறார். மிக அருகில் வந்து தாண்டுவதற்காக ஜம்ப் செய்யும்போது, அந்த நபரின் காலை எட்டி உதைத்து தள்ளிவிடுகிறது ஓட்டகம். இந்த வீடியோ தான் இப்போது வைரலாகியுள்ளது. @TacticalBuddy என்ற டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டிருக்கிறது. 

மேலும் படிக்க | சீண்டிய பெண்ணை வெச்சி செஞ்ச யானை: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News