குரங்கை அடித்தே கொன்ற மனித மிருகம், விளாசித்தள்ளும் நெட்டிசன்ஸ்: பதறவைக்கும் வைரல் வீடியோ
Shocking Viral Video: மனதை பதபதைக்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. பலவீனமான மனம் படைத்தவர்கள் இதை பார்க்க வேண்டாம்.
வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு.
ஆனால் சில விதிவிலக்கான வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றை பார்த்து நமக்கு மனித குலத்தின் மீது இருக்கும் நம்பிக்கை நசுங்கி விடுகின்றது. மனிதர்கள் தங்கள் கொடூரமான பக்கத்தை காட்டும் பல வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வெளியிடப்படுகின்றன. இவை பல சமயங்களில் நமது மனநிலையை பாதிக்கும் வகையில் இருக்கின்றன.
அப்படி ஒரு கொடூரமான வீடியோ தற்போது பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்தால் நம் மனம் பதபதைக்கின்றது. உத்தரபிரதேச மாநிலம் புடாவ்ன் மாவட்டத்தில் குரங்கு குட்டி ஒன்றை இருவர் சித்திரவதை செய்து கொடூரமாக தாக்கி கொன்று பின்னர் அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் வீசிய கொடூர வீடியோ வெளியாகியுள்ளது. சமூக ஊடக தளங்களில் வைரலாகி வரும் இந்த மனதை பதற வைக்கும் வீடியோவில், இரக்கமற்ற தாக்குதல் தொடரும் போது, அந்த இரு நபர்களும் குட்டி குரங்கை கட்டையால் அடிப்பதையும் அது பரிதாபமாக கத்துவதையும் பார்க்க முடிகின்றது.
குட்டி குரங்கு வலியால் துடித்தபடி இருக்க, இரு நபர்களில் ஒருவர் அதை தொடர்ந்து உதைப்பதை இந்த வீடியோவில் பார்க்க முடிகின்றது. இது அதிர்ச்சியில் நம்மை உறைய வைக்கிறது. அந்த நபர் அப்பாவியான அந்த குரங்கை மரத்தடியால் பலமுறை தாக்குகிறார். அந்த குரங்கை பெரும் வலிக்கு ஆளாக்கி, பின், அதை அருகிலுள்ள அழுக்கு சதுப்பு நிலத்தில் வீசுகிறார். இந்த தாக்குதலில் வீரியம் தாங்க முடியாமல் குரங்கு இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கொடூரமான தாக்குதல் வீடியோவை இங்கே காணலாம் (பலவீனமான இதயம் கொண்டவர்கள் இதை பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்)
குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு பேரில், ஒருவர் எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் குரங்கை தொடர்ந்து துன்புறுத்துகிறார். அருகில் இருக்கும் மற்ற ஒரு நபர், அவரை எந்த விதத்திலும் நிறுத்த முயற்சிக்கவில்லை. இவ்வளவு பெரிய கொடூரம் நடப்பதை அவர் பெரிதாக எடுத்துக்கொண்டது போலவே தெரியவில்லை.
பழிவாங்கும் செயலா?
இந்த வீடியோ நெட்டிசன்களிடமிருந்து சீற்றத்தைத் தூண்டியுள்ளது. விலங்குகளுக்கு எதிரான இதுபோன்ற கொடூரமான வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என இணையவாசிகள் கோரி வருகின்றனர். எனினும் இதற்கு மற்றொரு பக்கம் இருப்பது போலவும் தெரிகிறது. அந்த இடத்தில் பல குரங்குகள் இருப்பதாகவும் அவை மிகவும் ஆக்ரோஷமான சுபாவம் கொண்டவை என்றும், சில நாட்களுக்கு முன்னர், தனது வீட்டு மாடியில் பல குரங்குகளால் சூழப்பட்டு தாக்கப்பட்ட நபர் மாடிலிருந்து கீழே விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சமீபத்தில், அப்பகுதியில் பெண் ஒருவர் தனது வீட்டின் கூரையில் சில வேலைகளைச் செய்து கொண்டிருந்தபோது குரங்குகள் தாக்கியதில் இறந்தார். இதுபோன்ற சம்பவங்கள், உள்ளூர்வாசிகள் இந்த மிருகங்கள் மீது கோபமடைந்து, தங்கள் கோபத்தை இவ்வளவு கொடூரமான முறையில் வெளிப்படுத்த வழிவகுத்திருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர்
இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து தாங்கள் அறிந்ததாகவும், இது தொடர்பாக ஃபைஸ்கஞ்ச் பஹேடா காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். “சதுப்பு நிலத்திற்குள் விலங்கை வீசுவதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவர் குட்டி குரங்கை குச்சியால் அடிப்பதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது. தவ்ரி கிராமத்தைச் சேர்ந்த ரிஸ்வான் என்பவர் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக உள்ளார், அவரைப் பிடிக்க எங்கள் குழுக்கள் முயற்சித்து வருகின்றன” என்று ஃபைஸ்கஞ்ச் பஹேடா எஸ்ஹோ சித்தாந்த் சர்மா செய்தி நிறுவனமான பிடிஐ -யிடம் தெரிவித்தார்.
இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @Balramsingh_C என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்கள் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். பலர் அந்த நபரை விமர்சித்து வருகிறார்கள். சிலர் அந்த பகுதியில் குரங்குகளால் மனிதர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் ஆபத்தை பற்றி பேசி வருகிறார்கள்.
மேலும் படிக்க | பைக்கில் சைக்கிள் ஓட்டும் சேட்டைக்கார பையன் - வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ