Viral Video: வாஞ்சையான அந்த ஸ்பரிசம்... சான்ஸே இல்ல... இணையத்தை கலக்கும் வீடியோ!

Puppy - Kitten Video: பூனைகளுக்கும் நாய்களுக்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்தும் தருணங்கள் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 28, 2023, 01:29 PM IST
  • இரண்டு விலங்குகளுக்கும் இடையிலான அற்புதமான பிணைப்பு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
  • இந்த வீடியோவை ட்விட்டரில் 7.5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
  • சமூக ஊடகத்தில் வைரலாகும் வீடியோ.
Viral Video: வாஞ்சையான அந்த ஸ்பரிசம்... சான்ஸே இல்ல... இணையத்தை கலக்கும் வீடியோ! title=

பூனைகளுக்கும் நாய்களுக்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்தும் தருணங்கள் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். இப்படி ஒரு காணொளியை பார்த்தால் மக்களின் மனதில் உள்ள அழுத்தம் கவலை அனைத்தும் நீங்கி, நேர்மறை எண்ணங்கள் நிறைந்து விடும். தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோவில் நாயும் பூனையும் பரஸ்பரம் அன்பை வெளிப்படுத்துவது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளது. நாய் மிகவும் விசுவாசமான விலங்கு. நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான நட்பு என்பது அனைவரும் அறிந்ததே. அதே போன்று,  நாய்களுக்கும் பூனைகளுக்கும் இடையிலான நட்பை  பாசத்தையும் காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. அந்த வகையில், நாய் குட்டி ஒன்று, பூனைக் குட்டி ஒன்றை வாஞ்சையுடன் தடவு கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோவில், நாய்க்குட்டி ஒன்று பூனைக் குட்டி ஒன்றும் அமர்ந்திருப்பதைக் காணலாம். அபோது என்ன நினைத்ததோ, தன்னை ஆசையாக பார்க்கும் பூனைக் குட்டியை வாஞ்சையுடன் அருகில் வந்து, தடவிக் கொடுக்கிறது. தனது பாதங்களா, பூனை குட்டியின் நெருடுவது அனைவரையும்

சமூக ஊடகத்தில் பகிரப்படும் சில வேடிக்கையான, அரிய தருணங்களை காட்டும் வீடியோக்கள் நம் மனதை மிகவும் லேசாக்கி விடும். இணையத்த்தில் வைரலாகும் வீடியோக்கள், சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன.  

 அந்த காட்சிகளில், தூங்கிக் கொண்டிருக்கும் நாய்க்குட்டி பூனைக்குட்டியின் மேல் வைக்கப்படுகிறது. நாய்க்குட்டியை தன் மீது வைக்கும்போது பூனை காட்டும் ரியாஷனும் மிகவும் சுவாரஸ்யமானது. இந்த வீடியோவை ட்விட்டரில் 7.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.இந்த இரண்டு விலங்குகளுக்கும் இடையிலான அற்புதமான பிணைப்பைக் கண்டு பலர் ஆச்சரியப்பட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

சமூக வலைதளத்தில் வைரலாகும் நாய் குட்டி - பூனைக்குட்டி வீடியோவைக் கீழே காணலாம்:

 

 

நாய்க்கும் பூனைக்கும் இடையிலான பாட பிணைப்பை வெளிப்படுத்தும் அற்புதமான இந்த வீடியோ 154k என்ற அளவிற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது. 

சமீபத்தில், பூனை வீடியோ ஒன்று வைரலாகியது. திடீரென வெளவால் பறப்பதை பார்த்த பூனை கொடுக்கும் ரியாக்‌ஷன், குபீர் சிரிப்பை வரவழைக்கிறது. நமக்கே, அது வெளவால் தானா என ஒரு சந்தேகம் எழுவதால், அதை இரண்டு மூன்று முறை பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த வீடியோ பார்ப்பதற்கு வித்தியாசமானதய் இருப்பதால், பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவை முழுதும் பார்த்தால், புலி, பூனைக்குட்டி ஆனதைப் போன்ற ஃபீலிங் தோன்றும். ஆனால், இது பூனைக்குட்டி தானே பாஸ் என சிலர் கலாய்க்கவும் செய்கின்றனர். இந்த வீடியோவில், பூனையின் ரியாக்‌ஷன் மாஸ். 

சமூக ஊடகங்களில் தின தினம் பெரும்பாலானோர், தங்கள் நேரத்தை வீடியோக்களைப் பார்ப்பதிலும், ட்ரோல்களைப் படிப்பதிலும் செலவிடுகிறார்கள். தனிமை, கவலை மற்றும் மன அழுத்தத்தை போக்கும் நேரம் இது. தற்காலிக நிவாரணம் பெற இது போன்ற வீடியோக்கள் உதவுகின்றன. அதனால் தான் தினமும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் உறுதி செய்யவோ, பரிந்துரைக்கவோ இல்லை.)

மேலும் படிக்க | திடீர்ன்னு இப்படி செய்யாதடா! ஹார்ட் அட்டாக் வந்திரும்! மியாவ் பூனையை மிரள வைத்த வெளவால்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News