பிரபல ஆவணப்பட இயக்குனர் ஜஸ்டின் சல்லிவன் கைப்பற்றிய ஆப்பிரிக்க யானையின் பேரழிவை உணர்த்தும் புகைப்படம் ஒன்று போட்ஸ்வானாவில் வேட்டையாடுவதன் சோகமான யதார்த்தத்தைக் வெளிக்காட்டுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் உள்ள நாடு போட்ஸ்வானா. இங்கு யானைகள் அதிகமகா வேட்டையாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அங்கு வேட்டையாடப்பட்ட யானை ஒன்றின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. 


போட்ஸ்வானாவில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்த யானை தந்தத்திற்காக தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.  இந்த புகைப்படதிதல் வறண்ட அந்தக் காட்டின் நடுவே யானை ஒன்று தலை வெட்டப்பட்டுப் படுத்திருக்கும் காட்சியைப் பார்பவர் கண்கள் கண்ணீரில் நிறைகிறது.


அதிர்ச்சியூட்டும் இந்த புகைப்படம் ஆண்ட்ரி ஸ்டெனின் சர்வதேச பத்திரிகை புகைப்பட போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வேட்டையர்களின் கோர முகத்தை விவரிக்கும் இந்த புகைப்படத்திற்கு வனவிலங்கு பாதுகாவலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



போட்ஸ்வானாவில் சமீபத்தில்தான் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. தடைக்கு முன்னரும் போட்ஸ்வானாவில் கடந்த ஓராண்டில் நூற்றுக்கும் மேலான யானைகள் கொல்லப்பட்டன. 


தற்போது ஜஸ்டின் எடுத்த இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு  விலங்குகள் வேட்டையாடப்படுவதற்கு எதிரான எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்து வருகின்றனர்.