தல அஜீத்தின் `வலிமை` படம் குறித்து வெளியான பரபரப்பு தகவல்....

நீண்ட நாட்களுக்குப் பிறகு, தல அஜித்தின் `வலிமை` திரைப்படம் குறித்த சூடான செய்திகள்....
நீண்ட நாட்களுக்குப் பிறகு, தல அஜித்தின் 'வலிமை' திரைப்படம் குறித்த சூடான செய்திகள்....
பிற நட்சத்திரங்களின் ரசிகர்கள் தங்களது ஆதர்ச நடிகர்களின் வரவிருக்கும் படங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் அஜித் ரசிகர்கள் அல்லது தல அஜித் ஆர்மி - யினர் ஒவ்வொரு நாளும் அஜித்தின் புகைப்படம் ஏதாவது சிலவற்றை பதிவேற்றி ட்ரெண்டிங் செய்து விடுகிறாரிகள். அப்படி பிரபலமான வரிசையில் விசுவாசம் திரைப்படம் தனித்துவமானது. இறுதியாக, தயாரிப்பாளர் போனி கபூர் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். அது அஜீத் ரசிகர்களுக்கு நிறைய உற்சாகத்தைத் தரும் .
போனி கபூர் ஒரு முன்னணி தேசிய பத்திரிகைக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், "வலிமை அஜித் குமார் நடித்த ஒரு பெரிய அதிரடி படம், இது அவரது 60 வது படம். அதன் 50 சதவீத பணிகள் முடிந்து விட்டன. " என்று கூறி உள்ளார்.
COVID 19 தொற்றுநோய் முடிவுக்கு வந்த பின்னரே 'வலிமை ' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்ற செய்தி முன்னமே தெரிந்ததுதான். ஏனெனில் சம்பந்தப்பட்ட அனைவரின் ஆரோக்கியதிற்கு மட்டுமே அவர் முதல் முன்னுரிமை வழங்குவார் .
ஹூயூமா குரேஷி, யோகி பாபு மற்றும் கார்த்திகேயா ஆகியோர் இதில் அஜீத்துடன் நடிக்கின்றனர். இதில் அஜீத் ஒரு சிறந்த காவலர் (Super cop ) வேடத்தில் நடித்துள்ளார். வினோத் இயக்கிய 'வலிமை ' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- (மொழியாக்கம்) சரிதா சேகர்.