Most Fearful King Cobra Viral Video: பாம்பை பார்த்தால் படையே நடுங்கும் என்ற பழமொழியை நீங்கள் நிச்சயம் பலமுறை கேட்டிருப்பீர்கள். பாம்பை திடீரென பார்க்கும் போதெல்லாம் அது உண்மைதான் என்பதையும் நீங்கள் பலமுறை உணர்ந்தீப்பீர்கள். பாம்பு குறித்த இந்த அச்சம் பல நூறு ஆண்டுகளாக மனித இனத்தை தொடர்ந்து வருகிறது. அதனால்தான் பல்வேறு சமூகங்கள் பாம்பை, நாகங்களை தெய்வமாக வழிபடுகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், இன்றைய நவீன யுகத்தில் பாம்பு குறித்த வீடியோவையும் நீங்கள் அதிகம் கடந்து வந்திருப்பீர்கள். அதுவும் மழை காலத்தில் பாம்பு குறித்த தகவல்களுக்கும், இணையத்தில் வீடியோக்களுக்கும் பஞ்சமே இருக்காது எனலாம். வீடியோ என தெரிந்து பார்த்தாலும் கூட அதில் சிலவற்றை பார்த்தாலே நீங்கள் பயப்படுவீர்கள் அல்லவா... அந்த வகையில், வைரலாகி வரும் 12 அடி நீளம் கொண்ட ராஜ நாகத்தின் வீடியோ பார்ப்போரை பீதியில் ஆழ்த்தி உள்ளது. 


பார்த்தாலே பீதியாக்கும் வைரல் வீடியோ


கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தின் மலை கிராமமான அகும்பேவில் வனத்துறையால் அதிகாரிகளால் இந்த 12 ராஜ நாகம் பிடிக்கப்பட்டது. பின்னர் ஒருவாரம் கழித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் அந்த ராஜ நாகம் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டது. அகும்பே மழைக்காடு ஆராய்ச்சி நிலையத்தின் (ARRS) கள இயக்குநர் அஜய் கிரி என்பவர் இந்த பிரம்மாண்ட ராஜ நாகத்தின் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை தொடர்ந்து, இந்த வீடியோவை இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தாவும் அவரது X பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.