ஒரு மிருகக்காட்சி சாலையின் ஊழியரை ஒரு பெரிய பாம்பு தாக்கிய நிகழ்வு இன்ஸ்டாகிராம் லைவ் ஷோவில் பதிவாகி, அது இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கலிஃபோர்னியாவில் உள்ள ஊர்வன மிருகக்காட்சிசாலையின் நிறுவனர் ஜெய் ப்ரூவர், தனது மிருகக்காட்சி சாலையின் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்படி அவர் பகிர்ந்த ஒரு லைவ் வீடியோவின் போது, ஒரு மலைப்பாம்பு அவரைத் தாக்கியது. அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்ஸ்டாகிராமில் ஒரு லைவ் (Live) செஷனின் போது,  இந்த சம்பவம் நடந்தது. பின்னர் ப்ரூவர் தாக்குதல் வீடியோவை தனது கணக்கில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ அவரை ஃபாலோ செய்பவர்கள் மற்றும் பிற பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பல பார்வையாளர்கள் ப்ரூவரை கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.


பாம்பு தாக்கிய போது அவர் காத்த அமைதிக்காக பலர் அவரை புகழ்ந்துள்ளனர். அவர் இந்த வீடியோ கிளிப்பை தனது இன்ஸ்டாகிராம் கனக்கில் பகிர்ந்து, அதில், “ ஆபத்துக்கு மிக அருகில்... நான் இதுவரை பகிர்ந்த வீடியோக்களில் IGTV மிக அதிசயமானது” என்று குறிப்பிட்டுள்ளார். 


ALSO READ: Viral: எருமை மாட்டிற்கு பிறந்தநாள் கொண்டாடிய மனிதர் மீது காவல் துறை வழக்கு பதிவுசெய்தது ஏன்?



வைரல் வீடியோவில் (Viral Video), ப்ரூவர் ஒரு பெட்டியில் சுருண்டு கிடக்கும் ஒரு பெரிய பாம்பின் அருகில் நிற்பதைக் காண முடிகிறது. அவர் பார்வை பாம்பை விட்டு விலகியவுடன், பாம்பு திடீரென அவரைத் தாக்குகிறது. ஆனால், கணப்பொழுதில் அவர் விலகிச் சென்று பெரிய அளவில்  காயம் படாமல் தப்பினார். 


அவர், "ஓ! என் கண் பாம்பிடமிருந்து விலகிய அடுத்த கணம் இது நடந்தது. இந்த பாம்பு எவ்வளவு புத்திசாலி என்று பாருங்கள்? என்னால் இப்போது தப்பிக்க முடியாது என்பதை தெரிந்துகொண்டு அது என்னை தாக்கியது. அபார புத்திசாலி இது. வெகு நாட்களுக்குப் பிறகு, நான் பார்த்த மிக நெருக்கமான தாக்குதலாகும் இது” என்று அவர் கூறியுள்ளார். 


ALSO READ: Watch: போங்காட்டம் ஆடிய Pollard, சர்ச்சையைக் கிளப்பிய ‘out’: Viral ஆகும் வீடியோ


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR