ஆன்டிகா: மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஒரு பெரிய சர்ச்சை எழுந்தது. இலங்கையின் பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா போட்டியின் போது சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு கிரிக்கெட் உலகில் சலசலப்பு ஏற்பட்டது.
தனுஷ்கா குணதிலகா ஆட்டமிழந்த விதத்தில் சர்ச்சை
ரன் அவுட்டைத் தவிர்ப்பதற்காக வேண்டுமென்றே பந்தை நிறுத்தியதாக தனுஷ்கா குணதிலகா மீது குற்றம் சாட்டப்பட்டது. அதன் பிறகு மூன்றாவது நடுவர் (Third Umpire), ஃபீல்டிங் செய்வதை தடுத்ததற்காக (Obstructing the field) குணதிலகா ஆட்டமிழந்ததாக அறிவித்தார்.
முழு விவரம் என்ன?
இலங்கைக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான போட்டியில், இலங்கையின் பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலக இன்னிங்ஸின் 22 வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ஷாட் அடித்தார். ஆனால், மறுபக்க கிரீசில் இருந்த பேட்ஸ்மேன் ரன் எடுக்க மறுத்துவிட்டார். இதற்கிடையில் குணதிலகா கிரீசுக்கு வெளியே சென்று விட்டார். ஆனால் மீண்டும் கிரீசுக்கு திரும்பும்போது, பந்து அவரது காலில் பட்டது.
This rare dismissal has sparked outrage. Surely it wasn't deliberate!
MORE: https://t.co/roxIfLJm8E
@windiescricket pic.twitter.com/CRcYmk2l08
— Fox Cricket (@FoxCricket) March 11, 2021
பொல்லார்ட் விமர்சிக்கப்படுகிறார்
குணதிலக்காவின் கால்களில் பட்டு பந்து பின்னோக்கிச் சென்றது. இதை தொடர்ந்து, பேட்ஸ்மேன் ஃபீல்டிங் செய்ய தடையாக இருந்ததாக பொல்லார்ட் (Kieron Pollard) நடுவரிடம் புகார் அளித்தார். அதன் பிறகு மூன்றாவது நடுவர் குணதிலகா ஆட்டமிழந்ததாக அறிவித்தார்.
Danushka Gunathilaka was given out for this pic.twitter.com/Vc6YIo6dCi
— Arjun (@ArjunNamboo) March 10, 2021
பொல்லார்ட்டின் இந்த அணுகுமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த முடிவிற்குப் பிறகு, மேற்கிந்திய தீவுகள் அணியும் கீரோன் பொல்லார்ட்டும், பேட்ஸ்மேனுக்கு எதிராக அப்பீல் செய்து நியாயமான விளையாட்டை விளையாடவில்லை என விமர்சிக்கப்பட்டு வருகிறார்கள். ஏனென்றால், குணதிலக வேண்டுமென்றே பந்தை நிறுத்த முயற்சிக்கவில்லை என்பது ரீப்ளேவில் தெளிவாகத் தெரிந்தது. சமூக ஊடகங்களில் இந்த முழு சம்பவத்தின் வீடியோ வெகுவாக வைரலாகி (Viral) வருகிறது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR