ஐதராபாத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்போன் பேசிக்கொண்டு எதிர்திசையில் வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி மூளைச்சாவடைந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐதராபாத்தில் 35வயது இளைஞர் செல்போன் பேசிக்கொண்டு சாலையில் எதிர்ப்புறமாகச் சென்று மறுபுறத்தை அடைய முயன்றார். அப்போது நேராக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் அந்த இளைஞனின் வாகனத்தின் மீது பலமாக மோதியது.


இந்த விபத்தில் கீழே விழுந்த அந்த இளைஞருக்கு தலையில் பலத்த அடிபட்டது. விபத்து நேர்ந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் அடிபட்ட இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தலையில் அடிபட்டதால் அந்த இளைஞர் மூளைச் சாவடைந்துள்ளார்.


 



 


ஹெல்மெட் அணியாத காரணத்தினாலும், விதிகளை மீறி செல்போன் பேசிக் கொண்டே சாலையின் எதிர்புறத்தில் சென்றதாலும் விபத்தில் சிக்கி மூளைச்சாவடையும் நிலைக்கு இந்த இளைஞர் சென்றுள்ளார்.