Police Pre Wedding Shoot Video: முன்பெல்லாம் போட்டோஷூட்கள் என்பது ஆடம்பரமான ஒன்று என்பதை விட எளிய மக்கள் அணுக முடியாத ஒன்றாகவே இருந்து வந்தது. சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் ஆகியோரின் திருமணங்களில் மட்டுமே பெரியளவில் போட்டோஷூட் நடத்தப்பட்டு வந்தது. இது பொதுமக்களுக்கு எளிமையாக இல்லாததன் காரணம் பொருளாதாரம் மட்டுமல்ல, பொதுமனப்பான்மையும் இதில் பெரிய பங்கை ஆற்றியது எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, போட்டோஷூட் எடுத்தால் அவர்கள் என்ன நினைப்பார்களோ, இவர்கள் என்ன நினைப்பார்களோ என கேலிப்பேச்சுக்கு பயந்தும் பலரும் இதுபோன்ற போட்டோஷூட்களை தவிர்த்து வந்தனர். இருப்பினும், இந்த சமூக வலைதள வைரல் யுகத்தில் இது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது என்பது ஆரோக்கியமான சூழல் ஆகும். ஒரு சில பேர் வினோதமாக (?) போட்டோஷூட்களை மேற்கொள்வதன் மூலம் விமர்சனத்திற்கு ஆளானாலும், இதுபோன்ற செயல்பாடுகளை ஊக்குவிப்பது தனிமனித நம்பிக்கையை வலுவாக்குவதில் பெரும் வாய்ப்பை அளிக்கும்.


இயல்பான ஒன்று


அந்த வகையில், போட்டோஷூட்களில் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்கள் தான் கடந்த சில காலமாக முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. நாம் முன்னரே சொன்னது போல் இது ஒரு இயல்பான, சாதாரண விஷயம் தான் என்றாலும், சமீபத்தில் ஹைதராபாத்தில் ஒரு போலீஸ் ஜோடி மேற்கொண்ட  போட்டோஷூட் தான் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வழக்கம்போல், சமூக ஊடகங்களில் விவாதத்தையும் தூண்டியுள்ளது.


இரண்டு நிமிட வீடியோ


இந்த வீடியோ சுமார் இரண்டு நிமிடங்கள் வரை நீடிக்கிறது. மேலும் இந்த தம்பதிகள் இரண்டு பேரும் போலீஸ் அதிகாரிகள் ஆவர். எனவே, அந்த போட்டோஷூட்டின் போது அவர்கள் தங்களின் போலீஸ் சீருடையில் இருப்பதை பார்க்க முடிகிறது. மேலும் ஒரு திரைப்படத்தின் காட்சியை போன்றே எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் அவர்கள் இருவரும் காவல் நிலையத்திற்குள் நுழைவதையும் காணலாம். மேலும் அந்த வீடியோவில், சார்மினார் மற்றும் லாட் பஜார் உட்பட ஹைதராபாத் நகரம் முழுவதும் உள்ள அழகிய இடங்களில் தம்பதியர் பாடி நடனமாடுவதைக் பார்க்க முடிகிறது.



மேலும் படிக்க | Viral Video: அசந்த நேரம் பார்த்து ஐஸ்கிரீமை சுவைத்த கில்லாடி பறவை!


'தடுக்க சட்டம் வேண்டும்'


இந்த வீடியோ கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அவர்களின் உற்சாகத்தைப் புரிந்து கொண்டதாகக் கூறினாலும், இன்னும் சிலரோ பொதுப் பணம், பொதுச் சொத்துக்கள் மற்றும் காவலர்களின் சீருடைகளைப் பயன்படுத்துவதை விமர்சித்துள்ளனர். ஒரு பயனர் கமெண்ட் பிரிவில், "அவர்கள் பொதுச் சொத்தை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்துகிறார்கள், இது முற்றிலும் தவறு" என எழுதியுள்ளார்.  மற்றொரு பதிவர்,"இது நல்ல ரசனையில் இல்லை மற்றும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்துகிறது. இப்படி செய்யக்கூடாது என்ற பழக்கம் உள்ளது, ஆனால் இவற்றை முற்றிலுமாக தடுக்க விதியோ/சட்டமோ கொண்டுவரப்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.


'இதில் என்ன தவறு?'


இருப்பினும், சிலர் இந்த ஜோடிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், "இதில் எனக்கு எந்தத் தீங்கையும் நான் பார்க்கவில்லை. ஜோடிகள் தங்கள் வேலை என்ன என்பதை அந்த போட்டோஷூட்டில் காட்டுகிறார்கள். இந்த விஷயத்தில், அவர்கள் தங்கள் ஆளுமையை ஹார்ட்கோர் போலீஸ் அதிகாரிகளாக இருந்து காதல் ஜோடிகளாக மாற்றுகிறார்கள். படைப்பாற்றலையும் சிந்தனையையும் உண்மையிலேயே பாராட்டுகிறோம். திரைப்படங்களில் காட்டப்படுவதை போன்று இதுவும் ஒன்றுதான்" என்றார்.


மூத்த ஐபிஎஸ் அதிகாரியின் கருத்து


மேற்கூறிய வைரல் வீடியோவைப் பார்த்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி சி.வி.ஆனந்த் அவரது X (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில், "நான் இதற்கு கலவையான எதிர்வினைகளைப் பார்த்தேன். நேர்மையாக, அவர்கள் தங்கள் திருமணத்தைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாகத் தெரிகிறது, இது கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் பெரிய செய்தியாகும். இது மிக மிக கடினமான வேலை, குறிப்பாக பெண்களுக்கு, அவள் டிபார்ட்மெண்டில் ஒரு துணையை கண்டுபிடிப்பது நாம் அனைவரும் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பம். 


அது இரண்டு போலீஸ் அதிகாரிகள் என்பது உண்மை, அவர்கள் காவல் துறை சொத்தை, சின்னங்களை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. அவர்கள் முன்பே எங்களுக்குத் தெரிவித்திருந்தால், நாங்கள் நிச்சயமாக படப்பிடிப்புக்கு ஒப்புதல் அளித்திருப்போம்" என பதிவிட்டிருந்தார். 


மேலும், அவர்,"நம்மில் சிலர் கோபமாக உணரலாம், ஆனால் அவர்கள் என்னை அவர்களின் திருமணத்திற்கு அழைக்கவில்லை என்றாலும், அவர்களைச் சந்தித்து ஆசீர்வதிக்க விரும்புகிறேன். நிச்சயமாக, சரியான அனுமதியின்றி இதை மீண்டும் செய்ய வேண்டாம் என்று நான் மற்றவர்களுக்கு அறிவுறுத்துகிறேன்" என நகைச்சுவையான தொனியில் அறிவுரை கூறியுள்ளார். 


மேலும் படிக்க | கன்னாபின்னானு சண்டை போட்ட நாயும் குரங்கும்: கதிகலங்கி பார்த்த நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ