நியூசிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. 12 ஆண்டுகளாக கட்டிக்காப்பாற்றப்பட்ட ஒரு சாதனை இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்திய அணியின் இந்த மோசமான தோல்வி காரணமாக ரசிகர்கள் மிகுந்த வருத்தத்திலும் சோகத்திலும் இருந்தனர். தோனிக்கு பிறகு ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது மட்டும் இல்லாமல் 0-3 என ஒயிட்வாஷ் ஆகி உள்ளது. இது ஒரு வரலாற்று தோல்வியாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் ரசிகர்கள் இதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்வினை தெரிவித்து வருகின்றனர். ரோஹித் மற்றும் விராட் கோலியின் பார்ம் தோல்விக்கு காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் படிக்க | இஷான் கிஷனுக்கு பதில் இந்த சிஎஸ்கே வீரரை டார்கெட் செய்யும் மும்பை அணி!
இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் தோல்வி குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அணியில் உள்ள வீரர்களை விட அதிகம் யாராலும் வருத்தமாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் தோல்வியில் துவண்டு போகாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த 12 ஆண்டுகளாக இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வியை சந்திக்கவில்லை. தற்போது இந்த தொடர் வெற்றிக்கு நியூசிலாந்து அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது தவிர மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது இதுவே முதல் முறை.
சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். மொத்தம் நடைபெற்ற 18 டெஸ்ட் போட்டியில் அஸ்வின் பங்கு மிக முக்கியமானது. சமீபத்தில் நடைபெற்ற பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக பந்து வீசி இருந்தார். ஆனால் நியூசிலாந்து தொடரில் ஏமாற்றம் அளித்தார். நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக ஒன்பது விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இந்நிலையில் இந்திய அணியின் மோசமான தோல்விக்கு நானும் ஒரு காரணம் என்று அஸ்வின் பொறுப்பேற்றுள்ளார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் என்னால் பெரிதாக எதுவும் செய்ய முடிவில்லை என்றும், இதுதான் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்றும் தெரிவித்துள்ளார். டாப் ஆர்டரில் விக்கெட்கள் சரிய தொடங்கிய நிலையில் கீழ் வரிசையில் ரன்களை அடித்து இருக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டார்.
அஸ்வின் சொன்ன கருத்து
"நியூசிலாந்திடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளோம். இதுவரை இப்படி ஒரு தோல்வியை இந்திய அணி சந்தித்தது இல்லை. இதற்கு எப்படி பழி தீர்க்க போகிறோம் என்று தெரியவில்லை. நான் பெரிதாக எல்லாவற்றையும் எடுத்து கொள்ள மாட்டேன். ஆனால் இந்த தோல்வி மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவம். கடந்த 2-3 நாட்களாக இதனை எப்படி சரி செய்ய போகிறோம் அல்லது பதிலளிக்க போகிறோம் என்ற யோசனை இருந்து கொண்டே இருந்தது. நான் என்னிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். நடந்த தவறுக்கு நான் தான் காரணம். என்னால் அணிக்கு பெரிய பங்கை அளிக்க முடியவில்லை. நான் செய்தது போதுமானதாக இல்லை என்று எனக்கு தெரியும்" என்று அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ