தமிழகத்திற்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன் - கமல்ஹாசன்!
தன் எஞ்சிய வாழ்நாளில், தமிழகத்திற்கு சேவை செய்வதற்காகவே, அரசியலுக்கு வந்துள்ளதாக மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!
தன் எஞ்சிய வாழ்நாளில், தமிழகத்திற்கு சேவை செய்வதற்காகவே, அரசியலுக்கு வந்துள்ளதாக மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 129ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அந்த வகையில் சென்னை லிட்டில் ஃபிளவர் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவிக்கையில்...
"இந்த குழந்தைகளுக்கு உள்ள தன்னம்பிக்கை, அனைவருக்கும் இருந்தால் நம் நாடு பன்மடங்கு முன்னேறும்.
நான் இந்தப் பள்ளிக்கு 37 வருடங்களாக தொடர்புடையவன். ராஜபார்வை திரைப்படம் எடுக்க இந்த பள்ளி தான் எனக்கு உதவியது. என் தன்னம்பிக்கையும், இறுகிப்போன சில உணர்வுகள் நெகிழ்வதையும் இப்போது உணர்கிறேன்.
எனக்கு போதுமான அளவிற்கு புகழினை தமிழகம் கொடுத்துவிட்டது. தகுதிக்கு அதிகமான புகழை சேர்த்துள்ளது. இனி தமிழகத்திற்கு புகழ் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
என் எஞ்சிய வாழ்நாளில், தமிழகத்திற்கு சேவை செய்வதற்காகவே, அரசியலுக்கு வந்துள்ளேன்" என தெரிவித்தார்.