திமுக தலைவர் கருணாநிதி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களு தொடர்பாக இணையத்தில் நான் பகிர்ந்ததாக கூறப்பட்டு வரும் செய்திகள் பொய்யானவை என நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் திரையுலகில் தனது காமெடி நடிப்பால் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் யோகி பாபு. இயக்குனர் அமீர் இயக்கத்தில் யோகி என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் யோகி பாபு. தற்போது நயன்தாரா நடிப்பில் வெளிவர காத்திருக்கும் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து நடிகர் அஜித் நடிப்பில் உறுவாகும் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.


இந்நிலையில் கடந்த சில நாட்களாக யோகி பாபு பெயரில் போலியான தகவல் வெளியாகி வருகிறது எனவும், இந்த பொய்யான தகவல்களை வெளியிட்டு வரும் ட்விட்டர் கணக்கு போலியானது எனவும், அந்த கணக்கு தன்னுடையது இல்லை எனவும் ட்விட்டர் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் யோகி பாபு.



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளதாவது... "கடந்த சில நாட்களாக கலைஞர் ஐயா பற்றியும், ஓபிஎஸ் ஐயா பற்றியும் தவறான செய்தி வெளியிட்டதாக தகவல் வெளியாகிவருகிறது. இந்த தகவல்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னுடைய பெயரில் கிட்டத்தட்ட 5 ஐடிகள் இருக்கிறது. அது அனைத்தும் பொய்யானது. என்னுடைய உண்மையான ஐடி ஐயோகிபாபு (iyogibabu) என்பது தான். மேலும் நான் எந்த கட்சியையும் சேர்ந்தவர் இல்லை." என தெரிவித்துள்ளார்.