டாஸ்மாக்குக்கு நான் ஆதரவு என ஊடகங்களில் வந்தது தவறு என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் விளக்கமளித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக வார இதழ் ஒன்றில் எழுதி வரும் தொடரில், நடிகர் கமல் மதுவிலக்கு குறித்து விமர்சித்திருந்தார்.


அதில் அவர் கூறியதாவது:- ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மதுவை விரும்பாதவர்களாக ஆக்க முடியாது; அப்படி மாற்றினால் கள்ளினால் வரும் கொடுமைகளை விட பெரிய கொலைகள் பல நடக்கும். மதுவை உடனடியாக நிறுத்த உடம்பு கேட்காது; இது உடம்பு கேட்கும் வியாதி. குடிப்பதைக் குறைக்கலாம்; ஆனால் ஒட்டுமொத்தமாக நிறுத்த முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. பெண்களின் ஓட்டுகளை வாங்க பூரண மதுவிலக்கு என்று அடிக்கடி பூச்சாண்டி காட்டாதீர்கள். எனத் தெரிவித்திருந்தார். 


இதையடுத்து, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டது....!


ஊடக நண்பரே!
டாஸ்மாக்குக்கு (TASMAC) கமல் ஆதரவு என்ற செய்தி தவறு. திருத்திக்கொள்க.இல்லையேல் பொய் சொல்கிறீர் என்ற  குற்றச்சாட்டிற்கு ஆளாவீர். என அவர் தெரிவித்துள்ளார்.