தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களின் வாய்ப்பு பறிபோவது உண்மைதான் என நான் கூறவில்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இதுவரையில் நாக்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்து வருகின்றது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ் டெல்லியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பெங்களுருவில் சுயேச்சையாகப் போட்டியிட்ட பிரகாஷ்ராஜுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சி  ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் பிரசாரத்தில் ஈடுபட்டார். நன்றிக்கடனாக டெல்லியில் பிரகாஷ்ராஜ் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வருகிறார்.‘டெல்லி ஆம்ஆத்மி கட்சி அலுவலகத்தில் அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். 


அப்போது பிரகாஷ்ராஜ் பேசுகையில், '' கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் நாட்டை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்று விட்டன. ஆம் ஆத்மி போன்ற கட்சிகளால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும். குறிப்பாகச் சுகாதாரம், கல்வி வளர்ச்சியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் டெல்லி அதிக முன்னேற்றம் கண்டுள்ளது '' என்றார்.


மேலும், ``டெல்லி மாணவர்களுக்குத் தமிழக மாணவர்களால் பாதிப்பு ஏற்படுவது உண்மைதான்'' என்று அவர் கூறியதாக தகவல்கள் வெளியானது. பிரகாஷ் ராஜின்  பதிலளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ``தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லி மாணவர்களின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கவில்லை; திறமை அடிப்படையில் டெல்லியில் தமிழர்கள் இடம்பெறுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். 


இந்நிலையில் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், `நான் அப்படி கூறவேயில்லை. மோசமான உள்நோக்கத்துடன் என் கருத்து திரித்துக் கூறபட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.