கால மாற்றத்திற்கேற்ப மக்களின் வாழ்க்கையிலும் பலவித முன்னேற்றங்கள் நடைபெற்று வருகிறது, நாம் எந்த அளவு புதுமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதைவிட அதிகமாக பழமைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  பழமை எப்போதும் ஒரு பொக்கிஷம் போன்றது, அது எப்போதுமே மதிப்புமிக்கதாக இருக்கிறது.  பழைய பொருட்கள் நமது பொன்னான நியாபகங்களையும் நினைவுபடுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது, ஒவ்வொரு பழைய பொருட்களிலும் நமது மலரும் நினைவுகள் பல புதைந்து இருக்கும்.  பழமை எவ்வளவு சிறப்புமிக்கது என்பதை உணர்த்தும் விதமாக தங்கத்தை விட மதிப்புமிக்கது பழமை என்று பல பொன்னான பழமொழிகளும் இருக்கின்றது.  நமது நினைவுகளை மீட்டெடுக்கும் பழைய பொருட்களில் முக்கியமான ஒன்று பழைய இந்திய பைசா நாணயங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | என்னடா இது.. இந்த எடத்துல பாம்பா? பதற வைக்கும் வைரல்



90களில் பிறந்தவர்கள் அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள் பழைய பைசா நாணயங்களை பார்த்திருக்கவும், பயன்படுத்தியிருக்கவும் கூடும்.  இப்போது எவ்வளவு கட்டு காட்டாக சம்பாதித்தாலும் அந்த பணம் நமக்கு போதுமானதாக இருப்பதில்லை, ஆனால் 90 அல்லது அதற்கு முன்னர் இருந்த காலகட்டங்களில்  வெறும் 50 பைசாவை வைத்து அன்றைய நாளை நாம் ஓட்டிவிடலாம்.  தற்போது அவனிஷ் ஷரன் எனும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஆறு இந்திய பைசாவின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு, இதை வைத்து நீங்கள் எதையாவது வாங்கினீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.  இந்த நாணயத்தை பார்த்த பலரும் தங்களது குழந்தை கால பருவத்திற்குள் சென்றுவிட்டனர்.  


நெட்டிசன்களில் சிலர் இந்த நாணயத்தின் புகைப்படத்தை பார்த்துவிட்டு '90களின் அழகான சகாப்தம் போய்விட்டது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.  ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த புகைப்படத்தில் 50 பைசா, 25 பைசா, 5 பைசா, 2 பைசா, 3 பைசா மற்றும் 10 பைசா போன்ற ஆறு இந்திய நாணயங்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது.  இந்த நாணயங்களில் உள்ள 50 பைசா நாணயத்தை கண்டிப்பாக 90ஸ் கிட்ஸ்கள் பயன்படுத்தி இருப்பார்கள், இந்த நாணயத்தை பயன்படுத்திய கடைசி தலைமுறை 90ஸ் கிட்ஸ்களாக தான் இருக்கும்.  சிலர் 25 பைசா மற்றும் 50 பைசா நாணயங்களை சாக்லேட் வாங்க பயன்படுத்தியிருக்கிறோம் என்றும் சிலர் இந்த அனைத்து நாணயங்களையும் பயன்படுத்தி இருக்கிறேன் என்றும் ஒவ்வொரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.


மேலும் படிக்க | அதிசயம்..மனிதனை போலவே எழுந்து நிற்கும் கொடூரப் பாம்பு: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ