மும்பை: இசைக்கு மொழியோ, எல்லைகளோ கிடையாது. இதன் அண்மை உதாரணம் மும்பை போலீசாரின் இசை விருந்து.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு இசையும் கைவந்தக் கலை தான் என்பதை புரிய வைக்கிறது இந்த வைரல் வீடியோ. ஜேம்ஸ்பாண்ட் தீம் பாடலை மீண்டும் உருவாக்கிய மும்பை போலீசார் அவற்றை இசைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.


30 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட போலீசாரின் இசைக்குழு, ‘Dr. No’ திரைப்படத்தின் பாடலை இசைக்கிறது. இந்த திரைப்படத்தில் சீன் கோனரி (Sean Connery) முகவர் 007 (agent 007) ஆக நடித்திருப்பார்.


இணையத்தில் இதுவரை 14 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது, மும்பை காவல்துறையின் இந்த இசை அவதாரத்தைப் பார்த்து அனைவருக்கும் வியப்பு ஏற்பட்டுள்ளது.



இணையத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிடும் நெட்டிசன்கள், 'மிஷன் இம்பாசிபிள்' மற்றும் 'பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்' (‘Mission Impossible’ and ‘Pirates of Caribbean’) உள்ளிட்ட பல்வேறு இசைக் கோப்புகளையும் இசைத்து சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.


மும்பை காவல்துறை சமூக ஊடக தளங்களில் மீம் கேம்ஸுக்கு பெயர் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை மும்பை காவல்துறையின் இசைக்குழுவின் இசை வீடியோ வைரலாகி வருகிறது.


Read Also | Super Mother Hero: 10 ஆப்கன் சிறுமிகளை மீட்ட 11 குழந்தைகளின் அமெரிக்க அன்னை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR