சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில், எட்டு வயது சிறுவன், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நாகப்பாம்பை இரண்டு முறை கடித்து கொன்றான். பாதிக்கப்பட்ட 8 வயது தீபக் தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​அவனுக்கு பயங்கரமான சமபவம் நேர்ந்தது. ஒரு நாகப்பாம்பு தனது கைகளில் சுற்றியிருப்பதைக் கண்டு பயந்துபோன சிறுவன், அது தன்னை கொத்தியதும் மேலும் அச்சம் கொண்டான்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீபக் பாம்பு கடித்ததால்  கைகளை அசைக்க முடியாமல் வேதனையில் இருந்தான். உயிருக்கு பயந்த சிறுவன், தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ல இரண்டு முறை அதனை கடித்ததால் விஷப்பாம்பு இறந்தது. “பாம்பு என் கையைச் சுற்றிக் கொண்டு என்னைக் கடித்தது. நான் மிகுந்த வேதனையில் இருந்தேன். நான் கைகளை அசைக்க முயன்றபோது நாகப் பாம்பு அசையாமல், கைகளை இறுக்கமாக பிடித்தது நான் அதை இரண்டு முறை கடித்தேன், ”என்று தீபக் கூறினான்.


மேலும் படிக்க | Snake Bite: பாம்பு கடியில் விஷம் பரவாமல் இருக்க செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்!


இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுவனின் குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு அவருக்கு "பாம்பு விஷ முறிவு மருந்து" செலுத்தப்பட்டு ஒரு நாள் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். தீபக்கின் காயத்தை பரிசோதித்ததில், அவருக்கு "சாதாரண கடி" ஏற்பட்டதாக மருத்துவர்கள் முடிவு செய்தனர், அதாவது நாகப்பாம்பு கடித்ததே தவிர எந்த விஷத்தையும் வெளியிடவில்லை என மருத்துவர்கள் கூறினர். சிறுவன் இப்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார், அவர் முழுமையாக நலமாக உள்ளார்.


மேலும் படிக்க | பாம்பு கடித்த மகனை தோளில் சுமந்து சென்ற தந்தை: வீடியோ வைரல்


இந்தியாவில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுமார் 300 பாம்பு இனங்கள் வாழ்கின்றன. அவற்றில் 60 க்கும் மேற்பட்ட விஷம், 40 க்கும் மேற்பட்ட லேசான விஷம் மற்றும் சுமார் 180 விஷமற்றவை என கூறப்படுகிறது.  WHO வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 2000 முதல் 2019 வரை பாம்புக்கடியால் இறந்தவர்களின் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்தியாவில் இந்த 19 ஆண்டுகளில், 1.2 மில்லியன் (12 லட்சம்) பேர் பாம்புக்கடியால் இறந்துள்ளனர். இது உலகிலேயே மிக அதிகம். புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 58,000 இறப்புகள் இதனால் ஏற்படுகின்றன. பாம்புகள் மற்றும் பாம்பு கடி பற்றிய தவறான புரிதல், விழிப்புணர்வு இல்லாமை மற்றும் குறைவான அறிவே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | World Snake Day 2022: மருந்தாகும் பாம்பின் விஷம்; சில அரிய தகவல்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ