புதுடெல்லி: உலகில் நடக்கும் பல விஷயங்களை நம்மால் நம்ப முடிவதில்லை. கண்களால் பார்த்தாலும், காதுகளால் அதைப் பற்றி கேட்டாலும், நம்மால் சிலவற்றை சாத்தியம் என்று நம்ப முடிவதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பலவகையான மர்மங்கள் நிறைந்த பல இடங்கள் நம் உலகில் உள்ளன. அந்த வகையில் இந்தியாவில் இருக்கும் ஒரு மர்மமான இடத்தைப் பற்றி இங்கே காணலாம். இங்கு நடக்கும் ஒரு வினோத விஷயம் உங்களை கண்டிப்பாக ஆச்சரியப் பட வைக்கும்.


காந்த மலை


இந்தியாவில் (India) உள்ள ஒரு மலைப்பிரதேசத்தில், வாகனங்கள் பெட்ரோல்-டீசல் இல்லாமல் இயங்குகின்றன. இந்த மலை லடாக்கின் (Ladakh) லே பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள சாலையில் வாகனங்கள் தானாகவே நகர்கின்றன. இது மட்டுமல்ல, ஒருவர் தனது காரை இந்த இடத்தில் நிறுத்தி விட்டுச் சென்றால், அவருக்கு அந்த கார் கிடைக்காமலேயே போய்விடும். இவை அனைத்தும் எப்படி நிகழ்கின்றன என்ற ரகசியம் இன்னும் அறியப்படவில்லை.


விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த மலைப்பிரதேசத்தில் காந்த சக்தி (Magnetic Power) உள்ளது. இது வாகனங்களை ஒரு மணி நேரத்திற்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் இழுக்கிறது. இதன் காரணமாக இந்த இடம் 'காந்த மலை' அதாவது ‘Magnetic Hill’ என்று அழைக்கப்படுகிறது.


ALSO READ: யார் இந்த கீதாஞ்சலி ராவ்? TIME Magazine-ன் கவர் பேஜில் இவர் வரக் காரணம் என்ன?


விமானங்களையும் தாக்கும் காந்த விளைவு


இந்த மலையில் உள்ள காந்த விளைவின் தாக்கம் எத்தனை அதிகமானது என்றால், இந்த இடத்தின் மேல் பகுதியில் பறக்கும் விமானங்களும் இதிலிருந்து தப்பிக்க முடிவதில்லை. இந்த பகுதியில் பறக்கும் போது பலமுறை விமானத்தில் (Aeroplanes) அதிர்ச்சிகள் ஏற்பட்டதாகவும் விமானம் ஆட்டம் கண்டதாகவும் விமானிகள் கூறியுள்ளனர். இந்த காந்த விளைவுகளைத் தவிர்க்க அவர்கள் விமானத்தை துரிதப்படுத்த வேண்டியிருந்தது என விமானிகள் கூறியுள்ளனர்.


ஈர்ப்பு மலை


இந்த காந்த மலை 'ஈர்ப்பு மலை' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மலையில் ஈர்ப்பு விதி தோல்வியடைகிறது என்று கூறப்படுகிறது. ஈர்ப்பு விதிப்படி, நாம் ஒரு பொருளை ஒரு சாய்வில் விட்டால், அது கீழ்நோக்கி உருளும். ஆனால் இந்த காந்த மலையில் அதற்கு நேர்மாறான விஷயங்களே நடக்கின்றன. 


ALSO READ: பிறந்த குழந்தையின் வயது 27: அமெரிக்காவில் நடந்த அதிசயம், நடந்தது என்ன?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR