டேய் எப்புட்றா...பாம்பு தோலை உரிக்கும் அறிய வைரல் வீடியோ
Viral Video: தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள வீடியோவில் பாம்பு ஒன்று தனது சட்டை உரிக்கிறது. இந்த வீடியோ தரோபோது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.
பாம்பின் வைரல் வீடியோ: சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும். இதில் பாம்புகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களும் எந்நேரமும் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம், பாம்பை கண்டு அனைவருக்கும் பீதி இருப்பதால், அந்த வீடியோ மேலும் கிளிக்கை தந்துவிடுவதுதான். பொதுவாக பாம்பு என்றாலே படையும் நடுங்கும். பாம்புகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. பாம்புகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு.
பாம்புத் தோல் உரியும் வீடியோ
பெரும்பாலும் பாம்புகளை கண்டாலே அனைவரும் அஞ்சி ஓடத்தான் செய்வார்கள். அதன்படி இங்கு வைரலாக்கும் வீடியோவை நீங்கள் கண்டால், பதரிவிடுவீர்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது பாம்பின் சட்டை உரிக்கும் வீடியோவாகும். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு காரணம் சட்டை உரிப்பது அல்ல. முதலில் வீடியோவைப் பாருங்கள் அதன் பிறகு ஆச்சரியமான காரணத்தைத் தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | தாயை காப்பாற்றிய சிறுவன்...மனதை உருக வைக்கும் வைரல் வீடியோ
வீடியோவை இங்கே காணுங்கள்:
பாம்புகள் ஏன் தோலை உரித்துக் கொள்கின்றன?
பாம்புகளின் உருவத்திற்கு ஏற்ப அவற்றின் சட்டை இருக்கும். பாம்பு சட்டை உரித்தல் Ecdysis அல்லது moulting என்று அழைக்கப்படுகிறது. பாம்பின் பழைய தோல் அதன் வளர்ச்சிக்குத் தடையாக மாறும்போது பாம்பின் உடல் தனது சட்டையை அகற்றத் தொடங்கும். இளம் பாம்புகள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை தோலை உரிக்கும் என்றால், வயதான பாம்புகள் ஆண்டுக்கு 4 முதல் 8 முறை சட்டையை உரிக்கும்.
சமூக வலைதளங்களில் வைரல்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் வேகமாகப் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது. இது snakes_video__ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான லைக்குகளையும் வியூஸ்களையும் பெற்றுள்ளது. மேலும் இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ