‘தின்னு கின்னு வெச்சிடாதீங்க’: அது பழம் இல்ல, பாம்பு.. இணையத்தை வியக்க வைக்கும் வைரல் வீடியோ

Rare Snake Video: கண்களை ஏமாற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்தால் நீங்களும் ஏமாந்து விடுவீர்கள் என்பது நிச்சயம்!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 10, 2023, 03:53 PM IST
  • இணையத்தில் ஒரு தனித்துவமான பாம்பின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
  • இது பார்ப்பதற்கு அச்சு அசல் வாழைப்பழம் போலவே உள்ளது.
  • இதை பார்த்த உடன் யாரும் இதை பாம்பு என்று நம்ப மாட்டார்கள்.
‘தின்னு கின்னு வெச்சிடாதீங்க’: அது பழம் இல்ல, பாம்பு.. இணையத்தை வியக்க வைக்கும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

இயற்கையானது பல ரகசியங்களை தனக்குள் மறைத்து வைத்துள்ளது. அவற்றில் சில மக்களுக்குத் தெரியும், ஆனால் பலவற்றை பற்றி நாம் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. உலகில் பல வகையான விலங்குகள் இருந்தாலும், சில விலங்குகள் மீதான மனிதனின் ஈர்ப்பு எப்போதுமே அதிகமாக இருக்கும். அவற்றில் ஒன்றுதான் பாம்பு!! பாம்புகள் இணையத்தையும் விட்டு வைக்கவில்லை. பாம்புகள் பற்றிய பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 

சமீபத்தில், இணையத்தில் ஒரு தனித்துவமான பாம்பின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு அச்சு அசல் வாழைப்பழம் போலவே உள்ளது. இதை பார்த்த உடன் யாரும் இதை பாம்பு என்று நம்ப மாட்டார்கள். முதல் பார்வையில் யாராலும் பாம்பையும் வாழைப்பழத்தையும் வேறுபடுத்த முடியாது. வாழைப்பழம் போல் இருக்கும் இந்த பாம்பு இணையத்தில் பிரபலமாகி வருகிறது. 

மேலும் படிக்க | CCTV Video : சிறுமியை கொடூரமாக தாக்கும் தெருநாய்... நேரில் பார்த்த தாய் அதிர்ச்சி

கண்களை ஏமாற்றும் பாம்பின் வீடியோவை இங்கே காணலாம்: 

வீடியோவில், முதலில், இரு வாழைப்பழங்கள் ஒரு மேசையில் இருப்பது போன்ற காட்சியே பெரும்பாலானோருக்கு தோன்றும். ஆனால், இது கண்களின் ஏமாற்றம்தான். அதில் ஒன்றுதான் வாழைப்பழம், மற்றொன்று வாழைப்பழத்தைப் போலவே காட்சியளிக்கும் பாம்பு. அந்த பாம்பின் நிறம் மஞ்சளாகவும், அதன் உடலில் உள்ள புள்ளிகள் வாழைப்பழத்தில் உள்ள புள்ளிகள் போலவும் இருக்கின்றன. இரண்டையும் ஒன்றாகப் பார்க்கும்போது, ​​முதலில் யாராலும் இவற்றை வேறுபடுத்தி பார்க்க முடியாது. 

உலகில் பல வகையான பாம்புகள் காணப்படுகின்றன. வாழைப்பழம் போன்று காணப்படும் இந்த பாம்பு பனானா பால் பைதன் என அழைக்கப்படுகிறது. வாழைப்பழம் போல தோற்றமளிப்பதால், இந்த பாம்பு வாழைப்பழத்தின் பெயரைப் பெற்றது.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @gunsnrosesgirl3 என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் தனது கைகளால் பாம்பை தூக்குவதையும் காண முடிகின்றது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. வீடியோவைப் பார்த்து ஆச்சரியமடைந்த பயனர்கள் இதற்கு பல்வேறு கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | ‘ஹெல்லோ.. நான் இங்க இருக்கேன்’: குரங்கை மிஞ்சிய உடும்பு, செம கியூட் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News