புதுடெல்லி: உத்தரபிரதேசத்தின் மீரட் நகரைச் சேர்ந்த 25 வயதான நகைக்கடை வியாபாரி, ஒரே மோதிரத்தில் அதிக எண்ணிக்கையிலான வைரங்களை பதித்து கின்னஸ் உலக சாதனைகளில் இடம் பெற்றுள்ளார். "The Marigold-The Ring of Prosperity” என்று அழைக்கப்படும் மலர் வடிவ மோதிரம் 12,638 வைரங்களுடன் (38.08 காரட்) பொறிக்கப்பட்டுள்ளது. இது 165 கிராம் (5.8 அவுன்ஸ்) எடையைக் கொண்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், இதை உருவாக்கியுள்ள நகைக்கடை விற்பனையாளர் ஹர்ஷித் பன்சல், இப்போதைக்கு கின்னஸ் சாதனை படைத்த இந்த மோதிரத்தை விற்பதாக இல்லை என்று கூறியுள்ளார்.


ஏ.எஃப்.பி அறிக்கையின்படி, வடிவமைப்பாளர் தனது நேர்த்தியான இந்த படைப்பை ஒரு கனவுத் திட்டம் என்று விவரித்தார். "இது எளிதாக, வசதியாக அணியக்கூடியது” என்று அவர் கூறினார். இந்தியாவின் (India) வைர மையமான சூரத்தில் நகை வடிவமைப்பு வகுப்பில் படிக்கும்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு இந்த யோசனை வந்ததாக அவர் கூறினார்.



பன்சல், "10,000 க்கும் மேற்பட்ட வைரங்கள் (Diamonds) மோதிரத்தில் இருக்க வேண்டும் என்பது எனது இலக்காக இருந்தது. பல வடிவமைப்புகளையும் கருத்துகளையும் நான் பரிசீலித்து, இறுதியாக இதை தேர்வு செய்தேன்” என்று தெரிவித்தார்.


மீரட்டின் ரெனானி நகைக் கடையை வைத்திருக்கும் பன்சல், தான் பெரும்பாலும் பிரத்யேக நகைகளை தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டவர் என்றும், இந்த வடிவமைப்பு சவாலாக இருந்தது என்றும் கூறினார்.


ALSO READ: Watch Video: Rs 7 Crore பரிசு பெற்ற இந்த இந்திய ஆசிரியர் செய்த பணிகள் உங்களை வியக்க வைக்கும்


"மோதிரத்தின் பணிகள் 2018 இல் தொடங்கப்பட்டன. இது பிப்ரவரி 2020-ல் நிறைவடைந்தது" என்று அவர் தெரிவித்தார்.


கின்னஸ் சாதனை (Guinness Record) குறித்து அறிக்கையை வெளியிட்ட அவரது நிறுவனம், மோதிரத்தின் எட்டு அடுக்கு மலர் வடிவமைப்பில் உள்ள ஒவ்வொரு சிறிய இதழும் தனித்துவமானது என்று கூறியது. "இப்போதைக்கு இதை விற்பதற்கான எந்த திட்டமும் எங்களுக்கு இல்லை" என்று பன்சல் கூறினார். "இது எங்களுக்கு பெருமைக்குரிய ஒரு விஷயமாகும். இது விலைமதிப்பற்றது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.



மோதிரத்தில் அதிக வைரங்கள் பதிக்கப்படுவதற்கான இதற்கு முந்தைய கின்னஸ் சாதனையும் ஒரு இந்தியருக்கே கிடைத்தது. ஹைதராபாத்தை (Hyderabad) தளமாகக் கொண்ட ஒரு நகைக்கடை விற்பனையாளர் உருவாக்கிய மோதிரத்தில் 7,801 வைரங்கள் இருந்தன.


மோதிரத்தின் ஒவ்வொன்றும் வைரமும் விசேஷமாக சோதிக்கப்பட்டன. அவை அனைத்தும் EF நிறம் மற்றும் மிக மிக நேர்த்தியான தெளிவைக் கொண்டுள்ளன. உலகளவில் நகைகளில் பயன்படுத்தப்படும் வைரத்தின் சிறந்த குணங்கள் இவை. இந்த மோதிரத்துக்கு சர்வதேச ஜெமலாஜிக்கல் லேபரேட்டரி (IGI) சான்றிதழ் அளித்துள்ளது. இது உலகளவில் வைர நகை சான்றிதழ் பெறுவதற்கான மிகவும் மதிப்புமிக்க ஆய்வகங்களில் ஒன்றாகும்.


 



ALSO READ: யார் இந்த கீதாஞ்சலி ராவ்? TIME Magazine-ன் கவர் பேஜில் இவர் வரக் காரணம் என்ன?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR