இந்திய ராணுவத்தில் பணியாற்றும் வீரர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சுமார் 14 வகையான சாகசங்களை அரங்கேற்றும் அவர் செய்யும் ஒவ்வொன்று பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது. வீடியோவில் தொடகத்தில் சிறிய மூங்கில் குச்சியை கையில் வைத்திருக்கும் அவர், அதனை சாய்வாக சாய்த்து, அதன் மீது நொடிப்பொழுதில் தாவி, சாய்வாக இருக்கும் குச்சியின் பேலன்ஸிலேயே நிற்கிறார். எப்படி செய்தார் என்று யோசிப்பதற்குள் அடுத்த சாகத்தை அரங்கேற்றுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | தனது உயரத்தால், விமானத்தின் உயர் வகுப்பில் பயணம் செய்த உயர்ந்த மனிதர்!


அடுத்த சாகத்தில் காலியான மைதானம் ஒன்றில் இருபுறமும் இடுப்புயரத்துக்கு பிளாஸ்டிக் சேர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. சேர்களுக்கு நடுவில் படுத்திருக்கும் ராணுவ வீரர், கை பேலனஸில் உந்தி இடுப்புயரத்துக்கும் மேலாக வந்து சேர்களை பற்றுகிறார். ஐகோ.. முடியலைடா சாமி, எப்படிடா இப்படி செய்கிறார் என வியப்பதற்குள், மூங்கில் குச்சில் தாவி, முன்னும் பின்னும் ஜம்ப் செய்கிறார்.



சரி, இதெல்லாம் ஒருபக்கம் இருக்க.. அடுத்து என்னடா செய்யப்போகிறார் என பார்க்கும்போது, நான்கு பக்கெட்டுகளை தண்ணீர் நிரப்பி வைத்திருக்கிறார். தொலைவில் இருந்து ஓடிவரும் அவர், ஒவ்வொரு பக்கெட்டிலும் இருக்கும் தண்ணீரை லைட்டாக தள்ளிவிட்டுவிட்டு அப்படியே லாவகமாக பறந்து செல்கிறார். இன்னொரு சாகத்தில், மூன்று பாட்டில்களை வைத்து அதன்மீது தண்டால் எடுக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்தால், நிச்சயம் உங்களுக்கு வியப்பு ஏற்படாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ @VidyutJammwal என்ற டிவிட்டர் ஐடியில் பதிவிடப்பட்டுள்ளது. 


ALSO READ | ALSO READ | Well of Death Challenge: சமூக ஊடகங்களில் வைரலாகும் மரண கிணறு சவால் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR