ஜார்ஜியாவின் அட்லாண்டா பகுதியில் பியூ பிரவுன்(Beau Brown) எனும் ஒரு விசித்திர மனிதர் வசித்து வருகிறார். இவரை விசித்திரமான மனிதர் என்று சொல்வதற்கு காரணம் இவரது அபரிவிதமான வளர்ச்சி தான், இவர் 7 அடி 1 அங்குலம் உயரம் கொண்டவர். இவர் வட கரோலினாவுக்கு செல்ல வேண்டி இருந்ததால் வட கரோலினாவுக்கு விமானத்தில் economy பிரிவில் டிக்கெட் பதிவு செய்து இருந்தார்.
ALSO READ | Well of Death Challenge: சமூக ஊடகங்களில் வைரலாகும் மரண கிணறு சவால் வீடியோ
பின்னர் விமானத்தில் ஏறிய பியூ தனக்கென்று பதிவு செய்திருந்த இருக்கையில் சென்று அமர்ந்தார். ஆனால் அவரின் அதிகமான உயரத்தின் காரணமாக அவரால் அந்த இருக்கையில் சௌகரியமாக அமரமுடியாமல் சிரமத்திற்கு உள்ளானார். இதனால் விமான ஊழியர்கள் தன்னை வெளியேற்றிவிடுவார்களோ என்று குழப்பமடைந்தார். ஆனால் இவர் சற்றும் எதிர்பார்த்திடாத வகையில் விமான ஊழியர்கள் அவரை சௌகரியமாக உணரும் வகையில் விமானத்தின் முதல் வகுப்பில் அமர வைத்தனர்.
இந்த எதிர்பாராத நிகழ்வு கேக் மீது செர்ரி பழத்தை வைத்து அழகுபடுத்தியதை போன்ற ஒரு உணர்வை தந்தது என்று அவர் கூறியுள்ளார். அதனையடுத்து பியூ உயர்வகுப்பில் வட கரோலினாவிற்கு சென்றார். இந்த சம்பவம் குறித்த வீடியோயோவை பியூ சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் அந்த 40 நிமிட பயணமான வட கரோலினாவை சென்றடைய அசௌகரியமான இருக்கையிலிருந்து எப்படி சௌகரியமான இருக்கைக்கு சென்றார் என்பது குறித்து அந்த வீடியோ காமிக்கிறது. அந்த வீடியோவில் அவர் கேப்ஷனாக , "விமானத்தில் நான் பொருந்தவில்லை, அதனால் அவர்கள் எனக்கு முதல் வகுப்பைக் கொடுத்தார்கள்" என்று பதிவிட்டுள்ளார், மேலும் நகைச்சுவையாக இவ்வாறு அசௌகரியமான நிலை ஏற்பட்டதற்கு தன்னுடைய உடை காரணமாக இருக்கலாம் என்றும் பதிவிட்டுள்ளார்.
ALSO READ | Viral Video: கொண்டையில் ’பூ’ வைத்துக் கொண்ட வாத்துக்குஞ்சுகள்...!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR