புதிய Twitter CEO இந்தியர் பராக் அகர்வால்! உலகப் பிரபலமாகும் இந்தியர்கள்
டிவிட்டர் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அக்ரவால் நியமிக்கப்பட்டுள்ளார்
பிரபல சமூக வலைதள நிறுவனமான டிவிட்டர் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அக்ரவால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை சி.இ.ஓவாக இருந்த ஜாக் டோர்சி பதவி விலகுகிறார்.
16 ஆண்டுகளாக, டிவிட்டரின் துணைத் தலைவர், சி.இ.ஓ. மற்றும் நிர்வாக தலைவராக இருந்த ஜாக் டோர்சியின் இந்த அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தாலும், தான் விலக்குவதற்கான சரியான நேரம் இதுதான் என ஜாக் டோர்சி தனது டிவிட்டர் பதிவு மூலம் அறிவித்துவிட்டார்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஜாக் டோர்சியின் செயல்பாடுகள், முதலீட்டாளர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை (Investors Dissatisfaction) என்று பரவலாக கூறப்பட்டது. நிறுவனத்தின் செயல்பாடுகளைவிட, அவரது கவனம் கிரிப்டோகரன்ஸிகளுக்கு திரும்பிவிட்டதாக முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டிவந்த நிலையில் ஜாக் டோர்சி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாக் டோர்சி சிஇஓ பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற அழுத்தம் முதலீட்டாளர்களிடையே இருந்துவந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் முதலே டோர்சிக்கு பதிலாக யார் அடுத்த தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்படலாம் என ஊகங்கள் உலா வந்தன.
பராக் அகர்வாலின் நியமனத்திற்கு உலக பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். புலம்பெயர்ந்தோருக்கு அமெரிக்கா வழங்கும் வாய்ப்பைப் பற்றிய நல்ல நினைவூட்டல் என்று SpaceX நிறுவனர் எலன் மஸ்க் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கூகுள், மைக்ரோசாப்ட், அடோப், ஐபிஎம், பாலோ ஆல்டோ நெட்வொர்க்குகள் ஏற்கனவே இந்தியர்களின் திறமையை பயன்படுத்தி வருகின்றன. தற்போது ட்விட்டரும், உயர் பதவியி இந்தியரை நியமித்துள்ளது. தொழில்நுட்ப உலகில் இந்தியர்களின் வியத்தகு வெற்றியைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தற்போது, தனது ராஜினாமாவை அறிவித்துள்ள ஜாக் டோர்சி, ட்விட்டர் நிறுவனம் (Twitter, the Social Media Giant) அடுத்த கட்டத்திற்குச் செல்ல தயாராக உள்ளது என்று நம்புவதாலேயே பதவியை ராஜினாமா செய்வதாக தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது, டிவிட்டரில் புதிய பொறுப்பை வகிக்கும் இந்தியரான பராக் அக்ரவால், 2017ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உள்ளார். விரைவில் பராக் அகர்வால், ட்விட்டரின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் பொறுப்பேற்பார். புதிய தலைமை செயல் அதிகாரி நியமனம் குறித்த கலந்தாலோசனையின் முடிவில் பராக் அகர்வால் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ட்விட்டரின் தேவைகளையும் ஆழமாகப் புரிந்து வைத்துள்ள பராக் அகர்வாலே எனது தேர்வாக இருந்தார் என்று சொல்லும் டோர்சி, நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முடிவுகள் அனைத்திலும் பராக் இருந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த பத்தாண்டுகளில் மிகச் சிறப்பாக பணிபுரிந்திருக்கும் பராக், இனி நிறுவனத்தை இப்போது வழிநடத்துவார் என்ற டோர்சியின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ள பராக் அக்ரவால் நன்றி தெரிவித்துள்ளார்.
"முன்பை காட்டிலும் உலகம் இப்போது நம்மைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய செய்தி குறித்து பலருக்கும் பல விதமான கருத்து இருக்கும் என எனக்குத் தெரியும்" என்று பராக் அகர்வால் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ALSO READ | ஸ்பேஸ்சிற்கு தமிழில் எமோஜி வெளியிட்ட டிவிட்டர் நிறுவனம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR