ரயில் பயணம் மலிவானது என்றாலும், பலருக்கு இன்றும் அந்தப் பயணம் கனவாகவே இருக்கிறது. ஏழை முதல் பணக்காரர் வரை அனைவரும் பயணிக்கக்கூடிய ரயில் பயணம், நீண்ட தூரங்களுக்கு செல்ல உகந்தது. விரைவாகவும், அதேநேரத்தில் சிரமமில்லாமலும் செல்லலாம். ரயிலில் வெவ்வேறு வகைகளுக்கு ஏற்ப வெவ்வேறு கட்டணங்கள் உள்ளன. அதுஒருபுறமிக்க, இந்தியாவிலேயே இலவசமாக இயங்கக்கூடிய ஒரு ரயில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?.  இந்த சிறப்பு ரயிலைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | எக்ஸாம் ஹாலில் சாமி வேண்டி விடை எழுதும் சிறுவன் - வைரல் வீடியோ


இந்த ரயில் இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் எல்லையில் இயக்கப்படுகிறது. பக்ரா நங்கல் அணைக்குச் சென்றால், இந்த இலவச ரயில் பயணத்தை அனுபவிக்கலாம். நங்கலில் இருந்து பக்ரா அணைக்கு இயக்கப்படுகிறது. கடந்த 73 ஆண்டுகளாக 25 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த ரயிலில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். ஒருபுறம் நாட்டில் உள்ள அனைத்து ரயில்களிலும் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுகிறது. மறுபுறம் இந்த ரயிலில் ஏன் இலவசமாக பயணம்?  செய்ய ரயில்வே அனுமதிக்கிறது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். 


இதற்கு பின்னணியில் சுவாரஸ்ய பின்னணி உள்ளது. பக்ரா அணையின் தகவல்களை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த ரயில் இயக்கப்படுகிறது. நாட்டின் வருங்கால சந்ததியினர், நாட்டில் மிகப்பெரிய பக்ரா அணை எவ்வாறு கட்டப்பட்டது? என்பதை இந்த ரயில் பயணத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். இந்த அணை கட்டும்போது ஏற்பட்ட சிரமங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இயக்கப்படுகிறது. பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டில் இந்த இயக்கப்படுகிறது.


பக்ரா செல்லும் ரயில்பாதை அமைக்கும் பணியும் எளிதாக இருக்கவில்லை. மிகப்பெரிய மலைகளை வெட்டியே இந்த சிறப்பு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 73 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த ரயில் முதன்முதலாக 1949  ஆம் ஆண்டில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில் 25 கிராமங்களில் இருந்து தினமும் 300 பேர் பயணம் செய்கின்றனர். இந்த ரயிலின் மூலம் மாணவர்கள் அதிக பயன் பெறுகின்றனர். நாள் ஒன்றுக்கு அணைக்கு இருமுறை இந்த ரயில் இயக்கப்படுகிறது. கூடுதல் சிறப்பு தகவல் என்னவென்றால், ரயிலில் இருக்கும் பெட்டிகள் அனைத்தும் மரத்தால் செய்யப்பட்டவை. 


மேலும் படிக்க | கைக்கு எட்டும் இடத்தில் வந்த நிலா! வானில் நிகழ்ந்த அதிசயம்!


டீசல் என்ஜினில் இயக்கப்படும் ரயிலுக்கு நாள் ஒன்றுக்கு 50 லிட்டர் டீசல் செலவு செய்யப்படுகிறது. பர்மாலா, ஒலிந்தா, நெஹ்லா பக்ரா, ஹண்டோலா, சுவாமிபூர், கேடா பாக், கலகுண்ட், நங்கல், சலங்கடி உள்ளிட்ட கிராமங்கள் வழியே ரயில் செல்லும். இதுநாள் வரை 10 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்த ரயில் தற்போது 3 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. அதில் ஒரு பெட்டி சுற்றுலாப் பயணிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR