தேர்வு என்பது பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் அனைத்து மாணவர்களுக்குமே எட்டிக்காய் கசப்புதான். தேர்வில் என்ன கேட்கபோகிறார்கள்? என்பது பரம ரகசியம் என்பதால், தேர்வு அறைக்கு சென்று வினாத்தாளை பார்க்கும் வரை இருக்கும் படபடப்பே வித்தியாசமான அனுபவம். படித்திருக்கிறோமோ? இல்லையோ? வினாத்தாளில் என்னமாதிரியான வினா இருக்கிறப்போகிறது என்பது தான் தேர்வு எழுதுவதற்கு முன்பு இருக்கும் மிகப்பெரிய பயம். படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை பிரச்சனை இருக்காது. அவர்களுக்கு என்ன கேள்வி வந்தாலும் எழுதிவிடுவார்கள். படிக்காதவர்கள் அல்லது கொஞ்சம் படித்தவர்கள் எக்ஸாம் ஹாலில் செய்யும் சேட்டை தான் தனி ரகமாக இருக்கும்.
மேலும் படிக்க | போனை முதுகில் வைத்துக் கொண்டு தேடும் நபர் - வைரல் வீடியோ
வினாத்தாளில் இருக்கும் கேள்விக்கும், இவர்கள் எழுதும் பதிலுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இருக்காது. கேள்வி ஒன்றாக இருக்கும் பதில் கிடுக்குப்பிடியாக இருக்கும். பதிலை படித்து பார்க்கும் ஆசிரியர்கள், தலையை எங்கு கொண்டு முட்டிக் கொள்வது விரக்தியின் உச்சத்துக்கே கூட சென்றுவிடுவார்கள். சினிமா பாடல்கள் முதல் வீட்டு குழம்பு செய்முறை வரை என அனைத்தும் இவர்களின் விடைத்தாளை அலங்கரிக்கும். கல்லூரி பருவத் தேர்வு விடைத்தாள்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அப்படி, சரமாரியாக தங்கள் இஷ்டத்துக்கு எழுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களும் கூட இருப்பார்கள்.
Pray for an answer is correct! pic.twitter.com/J3X0OcGL1U
— Figen (@TheFigen) April 26, 2022
ஆனால் இங்கு வைரலாகியிருக்கும் வீடியோவில் சிறுவன் தேர்ச்சி பெற்றானா? இல்லையா? தெரியாது. ஆனால் இவருடைய வீடியோ சோஷியல் மீடியாவில் ஹிட். தேர்வு ஹாலில் உட்கார்ந்திருக்கும் சிறுவன், விடைத்தாளில் விடை எழுதுவதற்கு ஒவ்வொரு முறையும் கைக்கூப்பி சாமி கும்பிட்டுவிட்டு விடையைக் குறிக்கிறார். கேள்வி என்ன? பதில் என்ன? என்பது அந்த சிறுவனுக்கு மட்டுமே தெரியும். டிவிட்டரில் வைரலாகியிருக்கும் வீடியோவில், நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரீ டிவீட் செய்துள்ளனர்.
மேலும் படிக்க | Bizarre Beauty பெரிய தொந்தி இருந்தா தான் ஆணழகன்: அழகுக்கு வித்தியாசமான வரையறை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR