பிரபல டேட்டிங் செயலியான Tinder-ல் அறிமுகமான காதலியின் காரை திருடிச்சென்ற இந்தோனேசியா காதலரை டிபோக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தோனேசியாவின் டிபோக் பகுதியை சேர்ந்தவர் ஆந்திகா ப்ரேசியோ(வயது 39). இவர் பிரபல டேட்டிங் செயலியான டிண்டர் செயலி மூலம் வோக்ஸ்(வயது 41) என்பவருடன் அறிமுகமாகியுள்ளர். இருவருக்கும் இடையிலான நட்பு அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் அடிக்கடி வெளியே செல்லும் வழக்கம் கொண்டுவந்துள்ளனர்.


இந்நிலையில் கடந்த வாரம் ஆந்திகா, வோக்ஸ் இருவரும் மால்-க்கு சென்றுள்ளனர். அப்போது வோக்ஸ் சாப்பிங் செய்துக்கொண்டிருந்த போது ஆந்திகா வோக்ஸின் காரினை திருடி சென்றுள்ளார். இதுதொடர்பாக வோக்ஸ் காவல்துறையில் புகார் அளிக்க, இப்புகாரின் பேரில் ஆந்திகா கைது செய்யப்பட்டுள்ளார். 


காவல்துறையின் விசாரணையில் ஆந்திகா நெடுநாட்களாக தேடப்பட்டு வந்த திருடன் எனவும், டின்டர் செயலியில் கிடைக்கும் நண்பர்களின் உடமைகளை திருடுவதும் இவரது வழக்கமாக இருந்துவந்தது தெரியவந்துள்ளது.


டின்டர் செயலில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டும் தேர்ந்தெடுத்து தனது திட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் ஆந்திகா., இந்த வயது பெண்களே கணவர்களால் ஒதுக்கப்பட்டு தனிமையினை மறக்க பிற நட்புகளை தேடுகின்றனர் என விசாரணையில் தெரிவித்துள்ளார். கள்ள உறவுகளின் போது நடைப்பெறும் திருட்டுக்களை பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வெளிப்படுத்துவதில்லை, எனவே இத்தகு மூத்த வயது பெண்மனிகளை தேர்ந்தெடுத்து அவர்களிடம் திருடுவது தன் வழக்கம் என தெரிவித்துள்ளார்.