பெங்களூரு: Infosys நிறுவனத்தின் இணை நிறுவனர் NR நாராயண மூர்த்தி அவர்களின் மனைவி, நிவாரண பொருட்களை பேக்கிங் செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Infosys நிறுவனத்தின் இணை நிறுவனர் NR நாராயண மூர்த்தி அவர்களின் மனைவி சுதா மூர்த்தி அவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மற்றும் கர்நாடக மக்களுக்கு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படவுள்ள நிவாரண பொருட்களை தானே பேக்கிங் செய்து அனுப்பி வைத்துள்ளார்.


தன் நிறுவனத்தில் இருந்து அனுப்படும் நிவாரண பொருட்களினை, தனது நிறுவன ஊழியர்களுடன் இணைந்து தானும் பேக்கிங் செய்து அனுப்பி வைத்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.



கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் இதுவரை 12 பேர்  பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 6 லட்சமும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்திற்கு ரூ.200 கோடி நிவராண நிதியாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். 948 மீட்பு படை வீரர்களின் உதவியோடு இதுவரை 1250 பேர் மீட்கப்பட்டு 30-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கேரளாவை பொறுத்தவரையில், தற்போது மழை நீர் தேக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. எனினும், ஏற்பட்டு பாதிப்புகளில் இருந்து முழுவதுமாக மீள 5 மாதங்கள் வரை ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 374 உயிர்களை பலி வாங்கிய கேரளா வெள்ளத்தின் பாதிப்பில் சிக்கிய பொதுமக்கள் தற்போது சிறப்பு முகாம்களில் இருந்து வீடு திரும்பி வருகின்றனர். 


வெள்ள பாதிப்பி இருந்து மீண்டுவரும் கேரள மாநிலத்திற்கு உலக மக்கள் பலரும் உதவி கரம் நீட்டி வருகின்றனர்,. அந்த வைகயில் தற்போது Infosys நிறுவனம் சுமார் 4 லாரி நிவாரண பொருட்களை வழங்கியுள்ளது.