சர்வதேச புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறிய விஷயம், மிகவும் பிரபல பேசப்படும் நிலையில் அவர் அடுத்து எந்த அணியில் இணைவார் என்பது தொடர்பான ஊகங்களும், வியூகங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சந்தர்ப்பத்தில் பிரேசிலைச் சேர்ந்த கொரிந்தியன்ஸ் கால்பந்து கிளப் தனது பங்குக்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்பெயினின் கால்பந்து கிளப்பான பார்சிலோனாவில் இருந்து மெஸ்ஸி வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, அவர் எந்த அணியில் இணைவார் என்பது இன்னமும் தெரியவில்லை.


ஆனால், மெஸ்ஸிக்கு ராசியான 10 என்ற எண் கொண்ட ஜெர்சியில் அவர் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. அந்த ஜெர்சி கொரிந்தியன்ஸ் (Corinthians) அணியுடையது என்பது தான் ஆச்சரியம். அதைவிட அதிசயம், கொரிந்தியன்ஸ் கிளப் இந்த படத்தை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டு, "ஓ, சுமிடோ!" என்று எழுதியுள்ளது.



ஓ, சுமிடோ! என்பதன் பொருள், "ஹாய், மிஸ்ஸிங்" என்று என்பதாகும். தங்கள் கிளப்பில் மெஸ்ஸி சேருவாரா என்ற ஏக்கத்தை புத்திசாலித்தனமாக முன்வைக்கிறது இந்த டிவிட்டர் பதிவு. 


லியோனல் மெஸ்ஸி தனது பெயர் மற்றும் எண் கொண்ட கொரிந்தியன்ஸ் கிளப்பின் ஜெர்சியை வைத்திருக்கும் படம் 2014ம் ஆண்டில் எடுக்கப்பட்டது. கிளப்பின் அதிகாரப்பூர்வ ஸ்டேடியம் நியோ க்யூமிகா அரங்கில் மெஸ்ஸி இருக்கும் புகைப்படம் இது. 2014 பிரேசில் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்று கூறப்படுகிறது.


அந்த போட்டியில், மெஸ்ஸியின் அர்ஜென்டினா, நெதர்லாந்துக்கு எதிராக பெனால்டி முறையில் வெற்றிபெற்றது. ஆனால், இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் அணி ஜெர்மனியிடம் தோற்றது.


Also Read | Messi missing in Barcelona: மெஸ்ஸி இனி பார்சிலோனா அணியின் வீரர் இல்லை


இந்த புகைபப்டத்தைப் பார்த்த மெஸ்ஸியின் ரசிகர்கள், கொரிந்தியன்ஸ் கிளப்பின் இந்த சமயோஜிதமான நகைச்சுவை உணர்வை ரசித்தனர். அதுமட்டுமல்லாமல், அவர்களும் ஜாலியான கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர்.



33 வயது, லியோனல் மெஸ்ஸி தனது தொழில்முறை வாழ்க்கையில் முதல் முறையாக பார்சிலோனா கிளப்பில் இருந்து விலகியிருக்கிறார். அல்ல. தற்போது அவர் எந்தவொரு கால்பந்து கிளப்பிலும் இணைந்திருக்கவில்லை என்றாலும், பிரபல வீரரை தங்கள் கிளப்பில் சேர்த்துக் கொள்ள பல முன்னணி கால்பந்து கிளப்களும் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன.  


பிரெஞ்சு கிளப்பான PSG மற்றும் இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி என இரண்டு கிளப்களும் மெஸ்ஸியை தங்களுடன் இணைத்துக் கொள்ள மும்முரமாக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.  


Also Read | Football: இனி லியோனல் மெஸ்ஸி எந்த அணிக்கும் சொந்தமில்லை, தனி வீரரானார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR