கால்பந்து: பார்சிலோனாவின் லியோனல் மெஸ்ஸி இனிமேல் எந்த அணியிலும் இல்லை. பார்சிலோனா கிளப்புடனான ஒப்பந்தம் காலாவதியானதால் லியோனல் மெஸ்ஸி சுதந்திர பறவையானார். தற்போது தனது தாய்நாடான அர்ஜென்டினாவிற்காக Copa America சாம்பியன்ஷிப்பில் விளையாடும் மெஸ்ஸி, இனிமேல் எந்த கிளப்பில் வேண்டுமானாலும் இணைந்துக் கொள்ளலாம்.
இருந்தாலும், நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸியுடனான ஒப்பந்தத்தை மீண்டும் தொடர முடியும் என்று பார்சிலோனா அணி நம்புகிறது. La Liga லா லிகா மற்றும் வரி அலுவலகத்துடன் புதிய ஓப்பந்த தொடர்பாக மெஸ்ஸி பேசிவருவதாக ESPN செய்தி தெரிவித்துள்ளது.
அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி, மான்செஸ்டர் சிட்டி (Manchester City), பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (Paris Saint Germain) என பல கிளப்புகளுடன் இணைந்துள்ளார். இருப்பினும், மெஸ்ஸி கிளப்புடன் இணைந்திருப்பார் என பார்சிலோனாவின் புதிய அதிபர் ஜோன் லாபோர்டா நம்பிக்கை தெரிவிக்கிறார்.
Lionel Messi becomes a free agent for the first time since he joined @FCBarcelona pic.twitter.com/EH41E6EYG1
— Lionel Messi Fan Club (@LMessifanclub) July 1, 2021
கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக்கில், பேயர்ன் முனிச் (Bayern Munich) கிளப்பிற்கு ஏற்பட்ட பெருத்த நஷ்டத்திற்குப் பிறகு, லியோனல் மெஸ்ஸி, கிளப்பை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்திருந்தார். இருப்பினும், அர்ஜென்டினா பிரபலமான ஸ்ட்ரைக்கர் மெஸ்ஸியை இன்னும் ஒரு சீசனுக்கு வைத்திருந்தது.
சமீபத்தில், லியோனல் மெஸ்ஸி ஜேவியர் மசெரனோவின் சாதனையை முறியடித்து, தனது நாட்டில் அதிக கோல் அடித்த வீரரானார். கோபா அமெரிக்கா போட்டியின் போது பொலிவியா-வுக்கு (Bolivia) எதிராக லியோனல் மெஸ்ஸி இந்த சாதனையை நிகழ்த்தினார். பொலிவியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றார் 34 வயது லியோனல் மெஸ்ஸி.
தனது 148 வது போட்டியில் தனது நாட்டிற்காக 75 கோல்களை அடித்துள்ளார் லியோனல் மெஸி. "கிளப் மட்டத்திலும் தனிப்பட்ட மட்டத்திலும் அனைத்தையும் வெல்வதற்கு கிடைத்த வாய்ப்பு எனது அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும். தேசிய அணியுடன் இணைந்து போட்டியை வெல்வது அருமையானது, இது எனது கனவு" என்று மெஸ்ஸி சொல்கிறார்.
லியோனல் மெஸ்ஸியின் கிளப்பான பார்சிலோனாவும் இதற்காக ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது. "இது உண்மைதான், லியோ! வாழ்த்துக்கள்", என்று ட்வீட் செய்து வாழ்த்தியுள்ளனர்.
Also Read | லா லிகா கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR