'கலாம் சாட்' மற்றும் 'மைக்ரோசாட் - ஆர்' ஆகிய செயற்கைகோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், எடைகுறைந்த செயற்கைக்கோளை உருவாக்கிய இந்திய மாணவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்ளை தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் எல்லை பகுதியை கண்காணிக்க உதவும் செயற்கைக்கோள் மற்றும் தமிழக மாணவர்கள் தயாரித்த கலாம் சாட்டிலைட் ஆகியவை ,வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, நேற்றிரவு 11.37 மணியளவில் ராக்கெட் ஏவப்பட்டது. மைக்ரோசாட் ஆர் மற்றும் கலாம் சாட் என்ற இரண்டு செயற்கைக்கோள்களை சுமந்தபடி, பிஎஸ்எல்வி சி44 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.


மொத்தம் 690 கிலோ எடை உடைய மைக்ரோசாட் - ஆர் செயற்கைக்கோளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை, புவியை துல்லியமாக புகைப்படம் எடுத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். இது, புவி அமைப்பு, நாட்டின் எல்லை பகுதிகளை ஆய்வு செய்ய, ராணுவத்துக்கு பயன்படும்.


இந்த ராக்கெட்டில் நான்கு நிலைகள் இருக்கும். அதில், இறுதி நிலையில், செயற்கைக்கோள் இருக்கும். செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்திய பின், ராக்கெட்டின், நான்காவது நிலை, அங்கேயே சுற்றி வரும். இதன் ஆயுட்காலம், சராசரியாக, 7 மாதங்கள். இப்போது, இஸ்ரோ முதல் முறையாக, ராக்கெட்டின் நான்காவது நிலையில் உள்ள பாகத்தில், மாணவர்கள் உருவாக்கிய, 'கலாம்சாட்' செயற்கைக்கோளை பொருத்தியுள்ளது.


இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில், துவக்க நிலை உந்துதலுக்காக இரண்டு பூஸ்டர் கருவிகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. இதனால் செலவு குறையும். சிறிய வகை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த, எஸ்.எஸ்.எல்.வி., எனப்படும், 'ஸ்மால் சேட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள்' என்ற புதிய ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. 'சந்திரயான் - 2' விண்கலம், ஏப்ரலில் விண்ணில் செலுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கும், தமிழக மாணவர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,


"இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நுண்ணிய ஈர்ப்பு சக்தியில் 4வது நிலை விண்வெளி ராக்கெட்டை பயன்படுத்தி முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது" 


 



 


"மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்திய விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அதேபோன்று மிகக்குறைந்த எடை கொண்ட கலாம்சாட் செயற்கைக்கோளை உருவாக்கிய இந்திய மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்" 


 



 


என்று குறிப்பிட்டுள்ளார்.