ஜேம்ஸ்பாண்ட் பட நடிகை , ஓல்கா குரிலென்கோ, தனக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜேம்ஸ்பாண்ட் பட நடிகை ஓல்கா குரிலென்கோ (Olga Kurylenko) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தனது பழத்தை கட்டிவருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த வைரஸ்.


இதை தொடர்ந்து தற்போது இந்தியாவில் காலூன்றியுள்ள கொரோனா வைரஸ் தனது பழத்தை கட்ட துவங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் 129 பேர் கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கபட்டுள்ளனர். அதில், 13 பேர் குணமடைந்துள்ளனர், மூவர் பலியாகியுள்ளனர். 


இந்நிலையில், கொரோனா வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் டாம் ஹாங்க்ஸ் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதித்தது.


தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் டாம் ஹாங்க்ஸ், கொரோனா வைரஸ் தங்களைத் தாக்கியது குறித்து அறிந்து, பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி. இதுவரை தனிமைப்படுத்தப் பட்டே இருக்கிறோம். எங்களால் யாருக்கும் இந்தத் தொற்றுப் பரவாமல் பார்த்துக் கொள்கிறோம். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறோம் என்று சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.


இதை தொடர்ந்து, ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோயின், ஓல்கா குரிலென்கோ (Olga Kurylenko)வையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை. இவர், குவாண்டம் ஆப் சோலஸ், ஒபிலிவியான், மொமன்டம், த ரூம் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 



'எனக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வாரமாக உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறேன். காய்ச்சல் மற்றும் உடல் சோர்வாக இருப்பதுதான் இதன் முதல் அறிகுறிகள். உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். இதை சிரியசாக எடுத்துக் கொள்ளுங்கள்' என்று ஓல்கா குரிலென்கோ தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.