நோ-பால் நாயாகன் என இந்திய பந்துவீச்சாளர் புமராவை விமர்சித்த ஜெய்பூர் சாலை போக்குவரத்து துறைக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் புமரா!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்தாண்டு 2017-ஆம் ஆண்டு நடைப்பற்ற சாம்பியன்ஸ் ட்ரோப்பி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகர் ஜமனை பும்ரா அவுட்டாக்கினார். ஆனால் அது நோ-பால் ஆக இருந்ததால் விக்கெட் கொடுக்கப்படவில்லை.


இறுதிப் போட்டியின் முக்கியமான விக்கெட் எடுக்க வேண்டிய நிலையில் பும்ராவின் இந்த நோ-பாலால் இந்திய அணியின் வெற்றி பறிபோனதாக பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக ஜெய்பூர் சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் 'பும்ராவின் நோ-பால் புகைப்படத்துடன், சாலை விதிகளை மீறினால் இழப்பு தான்' என சாலை விதிகளை பின்பற்ற கூறி விழிப்புணர்வு பேனர்களை வைத்தனர்.



இந்நிலையில் தற்போது நடந்த முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி பந்தில் வெற்றி இலக்கை அடைந்து கோப்பையை வென்று கொடுத்த புமரா தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை கலைந்துள்ளார். 



இதனை வெளிப்படுத்தும் விதமாக ஆசிய கோப்பையுடன் தன் புகைப்படம் ஒன்றினை ட்விட்டரில் பதிவிட்டுள்ள புமரா “சிலர் படைப்பாற்றல் மூளையுடன் பேனர்களை டிசைன் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த புகைப்படம் நிச்சயம் உதவும் என நம்புகிறேன்.” என அந்த பதிவில் குறிப்பிட்டு தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.