தண்ணீர் போல் ஓடும் நெருப்பை கையால் அள்ளும் அதிசய மனிதன்: வைரல் வீடியோ
தொழிற்சாலை ஒன்றில் தண்ணீர் போல் ஓடும் நெருப்பை வெறும் கையால் அள்ளும் அதிசய மனிதர் ஒருவரின் வீடியோ இணையவாசிகளை திகைப்படைய வைத்துள்ளது. அவர் எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்தவில்லை என்றாலும் நீங்கள் யாரும் இதனை வீட்டில் முயற்சி செய்ய வேண்டாம்.
எரிமலை வெடித்து ஆறாக ஓடும் நெருப்புப் குழம்பை பலரும் பார்த்திருப்பீர்கள். எரிமலை வெடிக்கிறது என்றாலே அப்பகுதியைச் சுற்றியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சில கிலோ மீட்டர் தொலைவுகளுக்கு அப்பால் அழைத்துச் செல்லப்பட்டு பத்திரமாக தங்கவைக்கப்படுவார்கள். ஏனென்றால் எரிமலை நெருப்புக் குழம்பில் இருக்கும் நெருப்பின் வெப்பம் அளவிடமுடியாத கனலைக் கொண்டிருக்கும். அதன் தாக்கம் சில கிலோ மீட்டர் தொலைவுக்கு இருக்கும். மேலும், எந்த நேரத்தில் எவ்வளவு ஆக்ரோஷத்துடன் வெடித்துச் சிதறும் என்றும் கூற முடியாது.
மேலும் படிக்க | இப்படி ஒரு பாசமா? வியக்க வைக்கும் அழகான பாசக் காட்சி வீடியோ வைரல்
அப்போது வெளியே ஓடி வரும் நெருப்புக் குழம்புகள் தகதகவென கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். பார்த்த உடனே ஈரக்குலை நடுங்கும் அளவுக்கு அதனுடைய வெளித்தோற்றம் இருக்கும். அப்படியான நெருப்புக் குழம்பை ஒருவர் கையில் பிடிக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடியுமா?. ஆம் ஒருவர் பிடிக்கிறார். நெருப்புக் குழம்புகள் தொழிற்சாலைகளிலும் உருவாக்கப்படுவதுண்டு. அனல்மின் நிலையங்கள் மற்றும் மிகப்பெரிய இரும்பு தயாரிப்பு தொழிற்சாலைகளில் அத்தகைய நெரும்புக் குழம்புகளை சில தேவைகளுக்காக உபயோகப்படுத்துவார்கள். அப்படி, தொழிற்சாலை ஒன்றில் பைப் வழியே நெருப்புக் குழம்பு ஓடி வந்து ஓர் இடத்தில் கொட்டுகிறது.
அந்த இடத்தில் இருக்கும் அதிசய மனிதர் ஒருவர், அந்த நெருப்புக் குழம்பை கையில் பிடித்து தட்டிவிடுகிறார். இதனைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் மிரட்சியே ஏற்படும். எப்படி இவர் இப்படி செய்கிறார்? அவருக்கு ஏதும் ஆகவில்லையே, எப்படி இது சாத்தியம் என்றெல்லாம் யோசிப்பீர்கள். ஆனால், அந்த நெருப்புக் குழம்பை கையால் தட்டிவிடும் அவருக்கு எதுவும் ஆகவில்லை. இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அவரால் எப்படி தைரியமாக நெருப்புக் குழம்பை இப்படி தட்டிவிட முடிகிறது? என நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சிறு காயம் கூட இல்லாம் அவர் ஜாலியாக எழுந்து வந்து தன்னுடைய கையை காண்பிப்பது, காண்போரை வயிப்பின் உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது.
மேலும் படிக்க | செருப்பு திருடிச் செல்லும் பாம்பு: ஷாக்கான நெட்டிசன்கள் - வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ