விளையாட்டு வீரங்களுக்கு கழிவறையில் உணவு! சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ
Food at Bathroom: உத்தரபிரதேசத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்ட அதிர்ச்சியான சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது
நொய்டா: உத்தரபிரதேசத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்ட அதிர்ச்சியான சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. மனிதர்களுக்கு மதிப்பு கொடுக்காத அவலநிலையின் வெளிப்பாடாக இந்த வீடியோ பார்க்கப்படுகிறது. பல தரப்புகளில் இருந்தும் இந்த வீடியோவுக்கு கண்டனங்கள் வந்து குவிகிறது. அப்படி என்னதான் அந்த வீடியோவில் இருக்கிறது? வீடியோவில், கபடி வீரர்கள் கழிவறையின் தரையில், கழிவறைக்குள் சிறுநீர் கழிக்கும் டாய்லெட் சீட்டுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் இருந்து சாதம் மற்றும் உணவு பதார்த்தங்களை வழங்குவதைக் காணலாம். இந்த வீடியோ சுகாதாரம் தொடர்பான கேள்விகளை மட்டுமல்ல, வீரர்களுக்கு மரியாதை இவ்வளவு தானா என்பது போன்ற பல கேள்விகளையும் எழுப்புகிறது.
இந்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 'அவமரியாதை' செய்யும் செயல் என்று சிலர் விமர்சித்தால், பலரும் இந்த வீடியோவை கேவலமாக விமர்சிக்கினிறனர். வீடியோவை விமர்சிப்பது என்பதன் பொருள், அந்த வீடியோவில் உணவு பரிமாறப்படும் சூழ்நிலை மற்றும் சுகாதரமற்ற தன்மை என்று புரிந்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமற்ற 5 உணவுகளின் பட்டியல்
இந்த வீடியோ செப்டம்பர் 16 அன்று சஹரன்பூரில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஆகும். கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாறும் உத்தரப்பிரதேச மாநில நிர்வாகம் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி, இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. "பாஜக பல கோடிகளை பல்வேறு பிரச்சாரங்களுக்கு செலவிடுகிறது, ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு சரியான ஏற்பாடுகளை செய்ய பணம் இல்லை" என்று காங்கிரஸ் ட்வீட்டுடன் செய்தியையும் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவில், சாதம், பருப்பு, காய்கறி போன்றவற்றை கழிவறையில் வைத்து பரிமாறுவதும், காகிதத்தில் பூரிகள் இருப்பதும் தெரிகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, இந்த வீடியோவை ரீட்வீட் செய்யும் பிரபலங்கள், இந்த வீடியோவில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு கண்டனங்களை தெரிவிக்கின்றனர். இந்த வீடியோவிற்கு ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) தலைவர் ஜெயந்த் சவுத்ரி அளித்த பதிலில், "அவமரியாதையின் உச்சம்" என்று எழுதியுள்ளார்.
மனிதர்களுக்கு மட்டுமல்ல, விளையாட்டு வீரர்களுக்கும் உத்தரப் பிரதேசத்தில் மதிப்பு இல்லை என்று பலரும் அரசை விமர்சித்துள்ளன.
மேலும் படிக்க | நீரிழிவு நோயால் அவதியா? சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியம் உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ