நீரிழிவு நோயால் அவதியா? சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியம் உதவும்

Benefits Of Cinnamon in Sugar: நீரிழிவு நோயை இயற்கையான வழிகளிலும் கட்டுப்படுத்தலாம். இயற்கையான முறையில் சர்க்கரையின் அளவை குறைப்பதற்கான ஒரு வழியை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 11, 2022, 12:07 PM IST
  • சர்க்கரை நோயை இயற்கையாகக் கட்டுப்படுத்துவது எப்படி?
  • நீரிழிவு நோய்க்கு இலவங்கப்பட்டை நன்மை பயக்கும்.
  • இதில் பல வித மருத்துவ குணங்கள் உள்ளன.
நீரிழிவு நோயால் அவதியா? சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியம் உதவும் title=

சர்க்கரை நோயை இயற்கையாகக் கட்டுப்படுத்துவது எப்படி: உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, ​​அது நீரிழிவு நோயை ஏற்படுத்துகின்றது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பல வகையான மருந்துகள் மற்றும் இன்சுலின் தேவைப்படுகின்றது. எனினும், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க, மருந்து மாத்திரைகள் மட்டுமல்லாமல், சரியான உணவுமுறையும் மிக அவசியமாகும். ஆரோக்கியமான முறையான உணமை வாழ்வின் அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டியது மிக முக்கியமாகும். ஏனென்றால் நாம் உட்கொள்ளும் உணவும் சர்க்கரை அளவை பெரிதும் பாதிக்கிறது. இது மட்டுமின்றி, நீரிழிவு நோயை இயற்கையான வழிகளிலும் கட்டுப்படுத்தலாம். இயற்கையான முறையில் சர்க்கரையின் அளவை குறைப்பதற்கான ஒரு வழியை இந்த பதிவில் காணலாம். 

நீரிழிவு நோய்க்கு இலவங்கப்பட்டை நன்மை பயக்கும்

இலவங்கப்பட்டை நமது இந்திய சமையலறைகளில் காணப்படும் ஒரு மசாலா பொருளாகும். இதில் பல வித மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் அதிக அளவு ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. இதன் காரணமாக இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது தவிர இதை சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் குறைகிறது. இலவங்கப்பட்டை நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும், இதில் உள்ள பாலிஃபீனால்கள் சீரம் இன்சுலினைக் குறைப்பதன் மூலம் சர்க்கரையின் அதிகரிப்பைத் தடுக்கிறது.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது இந்த அறிகுறிகள் உடலில் தோன்றும் 

இலவங்கப்பட்டை எப்படி உட்கொள்ள வேண்டும்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகரிக்கும் சர்க்கரை அளவை குறைக்க விரும்பினால், அதற்கு இலவங்கப்பட்டையை உட்கொள்வது நன்மை பயக்கும். நீங்கள் அதை தண்ணீருடன் குடிக்கலாம். இதைச் செய்ய, ஒரு கிளாஸில் சிறிது தண்ணீரை எடுத்து, அதில் ஒரு துண்டு இலவங்கப்பட்டையை போடவும். இதை இரவு முழுவதும் ஊற விடவும். பிறகு காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த நீரை குடிக்கவும்.

ஆரோக்கியமான உடலில் சர்க்கரை அளவு எப்படி இருக்க வேண்டும்

ஆரோக்கியமான ஒரு நபரின் சர்க்கரை அளவு 100 mg/dl க்கும் குறைவாக இருக்க வேண்டும். நீரிழிவு நோயாளியின் சர்க்கரை அளவு 80-130 mg/dl வரை இருக்க வேண்டும். ஆரோக்கியமான நபரின் இரத்த சர்க்கரை அளவு உணவுக்குப் பிறகு 140 mg / dl க்கும் குறைவாகவும், நீரிழிவு நோயாளியின் அளவு 180 mg / dl க்கும் குறைவாகவும் இருக்க வேண்டும்.

இலவங்கப்பட்டையின் பிற நன்மைகள்:

-  இலவங்கப்பட்டையை உட்கொண்டால் அது உடலில் உள்ள கொழுப்பின் அளவு சமநிலைப்படுத்தி, அதன் மூலம் இதய நோய்களின் அபாயம் குறைகிறது. 

- நரம்பியல் நோய்களின் ஆபத்து வழக்கமாக இலவங்கப்பட்டை உட்கொண்டவர்களுக்கு மிகவும் குறைவாகவே ஏற்படுகிறது.

- இலவங்கப்பட்டை உட்கொள்ளவதால் புற்றுநோய் ஆபத்து குறைகிறது.

- இலவங்கப்பட்டையில் உள்ள அழற்சி எதிர்ப்பு, உடலில் வீக்கம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

- . நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் இது பயனுள்ளதாக இருக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சர்க்கரை நோய் அதிகரிப்பதால் கவலையா? அதற்கான வீட்டு வைத்தியம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News