நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘காஞ்சனா 3’ திரைப்படத்தில் இடம்பெறுள்ள ‘காதல் ஒரு விழி’ என்னும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவலிங்கா திரைப்படத்திற்கு பின்னர் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும்  திரைப்படம் "காஞ்சனா 3". இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. `முனி', `காஞ்சனா', `காஞ்சனா 2' ஆகிய வரிசையில் இந்தப் படமும் தயாராகி இருக்கிறது. 


ஹாரர் த்ரில்லர் பாசியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் வேதிகா, ஓவியா, கோவை சரளா, சூரி, யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர, ஶ்ரீமன், தேவதர்ஷினி, மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர்.  



மதன் கார்க்கியின் டூபாடூ (DooPaaDoo) கம்பெனியின் மூலம் ஆறு இசையமைப்பாளர்கள் தனித்தனியே ஆறு பாடல்களை இசையமைத்து கொடுத்துள்ளனர். தற்போது, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள்  தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் "காஞ்சனா 3"  படத்தின் செகண்ட் சிங்கிளை, சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.


தவிர, `காஞ்சனா' படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளார், ராகவா லாரன்ஸ். அதில் ஹீரோவாக அக்‌ஷய் குமாரும் ஹீரோயினாக கியாரா அத்வானியும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.