காஜல் அகர்வால் தனது கணவருடன் ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த புகைப்படத்தில் ஒரு ட்விஸ்ட் உள்ளது. ஆம்!! இதில் இரண்டு காஜல்களைக் காண முடிகிறது. இருவருக்கும் இடையில் காஜலின் கணவர் கௌதம் நிற்கிறார். காஜல் அகர்வாலுக்கு ஒரு இரட்டை சகோதரி உள்ளாரா என நெட்டிசன்கள் குழம்பி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகை காஜல் அகர்வால் (Kajal Aggarwal) கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில், தனது காதலன் கௌதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொண்டார். கௌதம் டிசர்ண் லிங்கிங் என்ற இ-காமர்ஸ் தளத்தின் உரிமையாளர்.


காஜல்-கௌதம் ஜோடி, தங்கள் வாழ்க்கையின் முக்கிய தருணங்களை தங்கள் ரசிகர்களிடம் பகிரத் தவறுவதில்லை. சமூக ஊடகங்களில் அவ்வப்போது பல புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதை இவர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.


காஜல் பகிரும் பல கியூட் படங்களை ரசிகர்கள் மிகுந்த ஆசையுடன் பார்ப்பதோடு அவற்றை தாங்களும் பகிர்கிறார்கள். இவர்களது திருமணத்தின் நிச்சயம், திருமண விழாக்கள் என அனைத்து புகைப்படங்களும் இன்றும் ரசிகர்களின் மனதில் அப்படியே இருக்கின்றன.


காஜல், கௌதம் இருவரும் மாலத்தீவில் தங்கள் தேனிலவை கொண்டாடச் சென்றனர். மாலத்தீவிருந்து அவர்கள் பகிர்ந்துகொண்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாகின.


இப்போது காஜல் அகர்வால் தனது கணவருடன் ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது நெட்டிசன்களைக் குழப்பிவிட்டது.



ALSO READ: மாஸ்டருக்கேற்ற Master என டிவிட்டரில் டிரெண்டாகும் மாளவிகா


ஆம்!! இந்த புதிய புகைப்படத்தில் இரண்டு காஜல் அகர்வால்கள் உள்ளனர். அவர்களுக்கு இடையே கௌதம் (Gautam Kitchlu) நிற்கிறார். இந்த இருவரில் உண்மையான காஜல் யார் என்று நெட்டிசன்களைப் போலவே அவரும் குழப்பமாக இருப்பதைப் போலத் தெரிகிறது.


இந்த குழப்பத்தையும் காஜல் அகர்வாலே தீர்த்து வைத்தார். புகைப்படத்தின் தலைப்பில், சிங்கப்பூர் மேடம் துசாட்ஸில் தனது மெழுகு சிலை நிறுவப்பட்டபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என காஜல் அகர்வால் விளக்கமளித்துள்ளார்.


ஒருபுறம் அந்த மெழுகு பொம்மையும் அழகு காஜலாய் தெரிகிறது. மறுபுறம், காஜல் அகர்வாலும் அழகு மெழு பொம்மையாய் தெரிகிறார்!!


ALSO READ: Web Series-ல் விஜய் சேதுபதியின் சம்பளத்தை கேட்டு மிரண்டு போன திரை உலகம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR