மாஸ்டருக்கேற்ற Master என டிவிட்டரில் டிரெண்டாகும் மாளவிகா

டிவிட்டரில் டிரெண்டாகும் மாளவிகாவை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ரசிகர்களின் சேட்டையை ரசிக்கும் நடிகை  மாளவிகா, என்னைப் பார்த்து நானே சிரிக்காவிட்டால் எப்படி? என்று கலாய்க்கிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 4, 2021, 07:24 PM IST
  • டிவிட்டரில் டிரெண்டாகும் மாளவிகாவை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்
  • ரசிகர்களின் சேட்டையை ரசிக்கிறார் நடிகை மாளவிகா
  • என்னைப் பார்த்து நானே சிரிக்காவிட்டால் எப்படி? என்று கலாய்க்கிறார்
மாஸ்டருக்கேற்ற Master என டிவிட்டரில் டிரெண்டாகும் மாளவிகா  title=

ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் விஜயின் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

விஜய்க்கு ஜோடியாக இல்லை என்றாலும், கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாநாயகியாக மாளவிகா கொடுத்த சில எக்ஸ்பிரஷன்கள் அருமையாக இருந்தன.

Also Read | Amazon-ல் கலக்க களமிறங்குகிறது விஜய்யின் Master!!

அவற்றை ரசித்த பலரும், மாளவிகாவின் எக்ஸ்பிரஷன்களை மீம்ஸ்களாக வெளியிட்டு ரசித்தனர். மாளவிகா மோகனன், விஜயிடம் கோபமாக பேசும் காட்சியில் மாளவிகாவின் நடிப்பு அருமையாக இருந்தது. அதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் உருவாகி சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.

டிவிட்டரில் டிரெண்டாகும் மாளவிகாவை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ரசிகர்களின் சேட்டையை ரசிக்கும் நடிகை  மாளவிகா, என்னைப் பார்த்து நானே சிரிக்காவிட்டால் எப்படி? என்று கலாய்க்கிறார்.

அந்த மீம்ஸ்களை ரசித்து   டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மாளவிகா மோகனன், மீம்ஸ்களை லேட்டாக பார்த்தாலும், லேட்டஸ்டாக,  நகைச்சுவையாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளார்.

என்னை நன்றாகச் சிரிக்க வைத்த, எனக்குப் பிடித்தமான சில மீம்ஸை நான் பகிர்கிறேன் என்று சொல்லி அவற்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் மாளவிகா. என்னைப்   பார்த்து என்னால் சிரிக்க முடியாவிட்டால் வாழ்க்கை மிகவும் போர் அடிக்கும் இல்லையா?" என கேள்வியையும் கேட்ட மாளவிகாவின் பாஸிடிவ் குணாதிசயம் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருப்பதோடு, மாளவிகாவின் ரசிகர்களாக பலரை மாற்றியும் விட்டது.

ALSO READ: நடிகர் சிம்புவின் பிறந்தநாள் பரிசாக 5 மொழிகளில் வெளியானது 'மாநாடு' திரைப்பட Teaser

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News