தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழி படங்களில் பிஸியாக வளம் வரும் நடிகை காஜல் அகர்வால். இவரது பிறந்தநாளான இன்று இவரின் பாரிஸ் பாரிஸ் திரைப்படம் மேக்கிங் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியில் வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம் குயீன். இந்த படத்தின் தமிழ் ரீமேக் பாரிஸ் பாரிஸ் எனும் பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் காஜல் அகர்வால் நடித்து வருகின்றார்.


குடும்ப உறவுகளை மையப்படுத்தி உறுவாகும் இப்படத்தில் குடும்ப உறவுகளின் மீது அதிகம் பாசம் கொண்ட காஜல் அகர்வால் தான் இந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவர் என படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் தெரிவித்துள்ளார்.



Mediente இன்டர்நேஷ்னல் பிளிம்ஸ் நிறுவன தயாரிப்பில் மனு குமாரன் இப்படத்தினை தயாரிக்கின்றார். காஜல் அகர்வாலுடன் வருன் சாக்ஷி ராவ், எலி அர்வராம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இந்நிலையில் இன்று படத்தின் நாயகி காஜல் அகர்வாலின் பிறந்தநாளினை முன்னிட்டு இப்படத்தின் மேக்கிங் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.