‘கபாலி’ டீசர் சாதனையை முறியடிக்குமா ‘காலா’ டீசர்?
காலா` படத்தின் டீசர் ரிலீஸ் மார்ச் 1-ம் தேதி (நாளை) வெளியிடப்படும்
கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 27-ம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி 'காலா' படத்தின் டீசர் மார்ச் 1-ம் தேதி (நாளை) வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் பதிவு செய்து இருந்தார்.
இந்நிலையில், 30 நொடிகள் கொண்ட காலா படத்தின் டீஸர் லீக் ஆகி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கசிந்ததா "காலா" டீஸர்? அதிர்ச்சியில் படக்குழு -வீடியோ
ஏற்கனவே பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். அந்த படத்தின் டீசர் வெளியாகி பல சாதனைகளை படைத்தது. சமூக வலைதளங்களில் தொடர்ந்து நம்பர் 1 டிரேண்டில் இருந்தது. மீண்டும் பா.ரஞ்சித் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் காலா படத்தின் டீசர், கபாலி பட டீசரின் சாதனைகளை முறியடிக்குமா? என ரசிகர் ஆவலுடன் எதிப்பார்பில் உள்ளனர்.
ஏற்கெனவே, ‘காலா’ படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது.