ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்  ஆங்கிலத்தில் நான் ஆற்றிய உரையை, எம் மக்களுக்காக அதன் தமிழ் மொழிபெயர்ப்பை  இணைத்துள்ளேன். தமிழர்களின் எதிர்காலம் குறித்த என் அக்கறையை உலகெங்கும் அறியச் செய்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு என் நன்றி! நாளை நமதே அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைகழகத்தில் நேற்று கமல் உறையாற்றினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேட்டி சட்டை அணிந்து இந்த நிகழ்யல் அவர் கலந்து கொண்டார். வணக்கம் என்று ஆரம்பித்தவருக்கு பெரும் ஆராவாரத்துடன் வரவேற்பு கிடைத்தது. பெருவாரியான மக்களை சென்றடைய தொடர்ந்து ஆங்கிலத்திலேயே உரையாற்றினார்.


இந்த முழு உரையையும் ஆரம்பிக்கும் முன்னதாக கமல் "தவறில்லாமல் இருக்க பார்த்துப் படித்து விடுகிறேன்" என்று கூறி ஆங்கிலத்தில் தன் உரையை மேடையில் வாசித்தார். அந்த ஆங்கில உரையை மொழிபெயர்ப்பு செய்ததில் சில தவறான செய்திகளும் உலவி வந்தன. 


இந்நிலையில் கமல் ஹாசனே அந்த ஆங்கில சிறப்புறையைத் தமிழாக்கம் செய்த பிரதியை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில்; "வணக்கம்! ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் நான் ஆற்றிய உரையை, எம் மக்களுக்காக அதன் தமிழ் மொழிபெயர்ப்பை இணைத்துள்ளேன். தமிழர்களின் எதிர்காலம் குறித்த என் அக்கறையை உலகெங்கும் அறியச் செய்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு என் நன்றி! நாளை நமதே".