ர்நாடக மாநிலம், மங்களூருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் காலியாக இருக்கும் சாலை ஒன்றில் வரும் பேருந்து, ஒரு குறிபிட்ட இடத்தில் திரும்புவதற்காக நிற்கிறது. பின்னர், சாலையில் வாகனங்கள் வராத நிலையில் பேருந்தின் ஒட்டுநர் வாகனத்தை சாலையில் குறுக்காக கொண்டு வந்து திருப்புகிறார். அப்போது தொலைவில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வேகமாக வரும் இளைஞர், பேருந்து சாலையின் குறுக்கே வருவதை கவனிக்கவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | INDvsSA: முறைத்த ஜேன்சன்.. ஸ்டம்பை பறக்கவிட்ட பும்ரா..! Video


பின்னர், நொடிப்பொழுதில் அவர் கவனிக்கும்போது அவருடைய இருசக்கர வாகனமும், பேருந்தும் அருகருகே சென்றுவிடுகின்றன. வேகத்தை இளைஞரால் கட்டுப்படுத்த முடியாததால், அதே வேகத்தில் இருசக்கர வளைத்து செல்கிறார். ஆனால், பேருந்தின் ஒட்டுநர் இளைஞர் வேகமாக வருவதை கவனித்து உடனடியாக பிரேக் அழுத்தியதால், அப்போது ஏற்படவிருந்த விபத்தில் இருந்து தப்பிக்கிறார் அந்த இளைஞர். பேருந்து ஓட்டுநர் உரிய நேரத்தில் பிரேக் அடிக்காமல் இருந்ததிருந்தால், இளைஞரின் உயிருக்கு உத்திரவாதம் சொல்லியிருக்க முடியாது.



இந்த விபத்தில் இருந்து தப்பிய அந்த இளைஞர் கட்டுப்பாடு இல்லாமல் வாகனத்தை சுவரோரமாக ஓட்டியதுடன், சாலையின் ஒரத்தில் இருந்த ஒரு சிறிய ரூமுக்கும், மரத்துக்கும் இடையிலான மிகச்சிறிய இடைவெளியில் தப்பிச் செல்கிறார். அந்த இடத்திலும் அவர் விபத்தில் சிக்கியிருக்க வேண்டியது. நல்வாய்ப்பாக, அவர் தப்பித்தார். இந்த வீடியோவை இணையத்தில் காண்போரை பதைபதைக்கச் செய்கிறது. டிவிட்டிரில் பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைக் கடந்துள்ளது. பார்ப்பவர்கள் அனைவரும், அந்த இளைஞருக்கு ஆயுசு கெட்டி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.


ALSO READ | Spit game! மாவுல எச்சில் துப்புவியா? மாமியா வீட்ல களி தின்னு! 6 பேரை அள்ளிய போலீஸ்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR