உத்தரபிரதேசத்தில் லக்னோ பகுதியில் உள்ள சாலையோர உணவகத்தில் சமையல்காரர் சப்பாத்தி செய்யும் வீடியோ வெளியாகி வைரலானது.
அவர் மாவில் எச்சில் துப்பியது வெளியானபோது, அனைவருக்கும் அருவெறுப்பு ஏற்பட்டது. இந்த எச்சில் துப்பும் வீடியோ (Spit Video Viral) இணையத்தில் வெளியானதை அடுத்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லக்னோவின் ககோரி காவல் நிலையப் பகுதியில் உள்ள ’இமாம் அலி தாபா’ என்ற கடையில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. வீடியோவில், இரண்டு சமையல்காரர்கள் தந்தூரில் ரொட்டி தயாரிப்பதைக் காண முடிந்தது.
ALSO READ | 6 சிங்கங்களை சிங்கிளா சமாளிக்கும் பொண்ணு வீடியோ வைரல்
அவர்களில் ஒருவர் மாவில் எச்சில் துப்புகிறார். மற்றொருவர் தனது கடமையை கண்ணாகவே செய்துக் கொண்டிருக்கிறார். அவரும் இதை கண்டு கொள்ளவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை.
#Lucknow A cook along with five others was arrested from Kakori area after a video showing him spitting on food went viral. pic.twitter.com/aEaZhlmMYa
— Adeeb Walter (@WalterAdeeb) January 11, 2022
தற்போதைய சம்பவத்தில், ஹோட்டல் உரிமையாளர் யாகூப் மற்றும் ஊழியர்கள் டேனிஷ், ஹபீஸ், முக்தார், ஃபிரோஸ் மற்றும் அன்வர் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதைப் பார்க்கும்போது, இது வழக்கமான வேலையைப் போலவே தெரிகிறது. அதாவது, அவர்கள் எச்சில் (Spit Video Viral) துப்புவது முதல்முறை அல்ல, எப்போதுமே இதுபோன்ற அருவருப்பான செயல்களை செய்து சுகாதார கேடு ஏற்படுத்துபவர்கள் என்பதுபோல தோன்றுகிறது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு முன்பும் சாலையோரக் கடைகளில் உணவு தயாரிக்கும்போது எச்சில் துப்பும் இதுபோன்ற வீடியோக்கள் வெளியாகிவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ | எச்சில் துப்பி ஸ்பெஷல் ரொட்டி செய்த சமையல்காரர்; ரெய்டு விட்ட போலீசார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR