கர்நாடகாவின் ஹூப்ளி பகுதியை சேர்ந்த தலைமை காவலர் ஒருவர் தனது வளிமைமிக்க லட்தியை புல்லாங்குழலாக மாற்றி பாடல் இசைத்து வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"இசை வாசித்தல் மற்றும் இசை வாத்தியங்களை உண்டாக்குதல் போன்ற செயல்களை நீண்ட காலமாக தனது பொழுதுபோக்காக கொண்டிருக்கும் இந்த காவலர், கர்நாடக காவல்துறையால் தனக்கு அளிக்கப்பட்ட லட்தியினையும் புல்லாங்குழலாக உருமாற்றியுள்ளார். 


சந்திரகாந்த் ஹட்ஜி என அடையாளம் காணப்பட்டுள்ள இவர் தனது லத்தியால் உருவாக்கப்பட்ட புல்லாங்குழலை கொண்டு நாட்டுப்புற பாடல் இசைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.



52 வயதான ஹட்சியின் திறமை, கலை திறமையும் கண்டு பெங்களூரு கூடுதல் பொலிஸ் பிரிவு அதிகாரி (ADGP) பாஸ்கர் ராவ் ஒரு சிறப்பு பரிசினையும் அளித்துள்ளார். இதுகுறித்து சந்திரகாந்த் தெரிவிக்கையில் "கடந்த திங்கள் அன்று ராவ் என்னை நேரில் பார்க்க வேண்டும் என அழைத்தார். பின்னர் எனது லத்தி புல்லாங்குழலில் ஒரு பாடல் இசைக்கச் சொன்னார். பின்னர் எனது திறமையினை பாராட்டி சிறு சன்மானம் அளித்தார்" என தெரிவித்தார். இந்த காவல்துறை கலைஞரின் புகழை தற்போது ஊடகங்கள் மேலும் பிரபலம் செய்து வருகின்றது.


உள்ளூர் கருவிகள் பயன்படுத்தி, ஹட்ஜி தனது திறமையுடன் காற்றை கொண்டு விளையாடி வருகின்றார். அவரது திறமையை கண்டு நாங்கள் பெருமை படுகிறோம் என பாஸ்கர ராவ் தெரிவித்துள்ளார்.