பேட்ட திரைப்படத்தில் இருக்கும் சுவாரசியங்களை ரசிகர்கள் யாரும் வெளியே சொல்லிவிட வேண்டாம் என அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் இன்று வெளியாகும் திரைப்படம் பேட்ட. பொங்கல் விருந்தாக இன்று இருபெரு நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகிறது. ஒன்று அஜித் நடிப்பில் வெளியாகும் விஸ்வாசம், மற்றொன்று ரஜினியின் நடிப்பில் வெளியாகும் பேட்ட.


ரஜினியின் பேட்ட படத்தில் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், நவாசுதின் சித்திக், மேகா ஆகாஷ் என பல நடிகர்கள் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



"தொடர்ந்து வரும் அன்புக்கு நன்றி. இன்று திரைக்கு வரும் பேட்ட திரைப்படத்தை பார்த்து மகிழுங்கள்.


பேட்ட படத்தின் கதை, சுவாரசியங்களை வெளியே சொல்லிவிட வேண்டாம்.


தியேட்டரில் எடுக்கும் வீடியோக்களை பரப்பாதீர்கள், பைரசியை ஆதரிக்காதீர்கள். விஸ்வாசம் திரைப்பட குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.


சமீப காலமாக., படம் வெளியான அதே நாளில் அப்படத்தின் விமர்சனங்கள் வெளியே வந்து படத்தின் ஓட்டத்தினை திசை திருப்பி விடுகிறது. படத்தின் வெற்றி தோல்வியை முதல் நாள் முதல் திரையிலேயே விமர்சகர்கள் முடிவு செய்துவிடுகின்றனர். இந்த முடிவுகள் படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் கூட்டத்தினை பாதிப்பது இயல்பாகிவிட்டது. இதனை தடுக்கும் விதமாக, இவ்வாறு இயக்கநர் கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.