இணையத்தை கலக்கும் ரஜினியின் ‘பேட்ட பராக்’ பொங்கல் ஸ்பெஷல்....
இணையத்தை கலக்கும் ரஜினி கார்த்திக் சுப்பராஜ்-ன் பொங்கல் ஸ்பெஷல் வீடியோ!
இணையத்தை கலக்கும் ரஜினி கார்த்திக் சுப்பராஜ்-ன் பொங்கல் ஸ்பெஷல் வீடியோ!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், சசிகுமார், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அந்த படத்தின் இயக்குநர் கார்திக் சுப்பராஜும் ரஜினியும் செம்ம குஷியில் இருக்கின்றனர்.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ரஜினியுடன் இணைந்து பேட்ட பராக் என்று கூறும் வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை கார்த்திக் சுப்பராஜ் பொங்கல் ஸ்பெஷலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் ‘பேட்ட பராக்’ என்று கூறிவிட்டு சிரிக்கின்றனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.